தமிழ்மண நிர்வாகத்துக்கு வணக்கம்!

”தூத்தேறி” என்ற தலைப்பில் வந்த என்னுடைய ஒரு இடுகை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது நன்றி. due to the following reason என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் எந்த reason என்று தெரியவில்லை :-(

இந்த இடுகை ஏதோ ஒரு காரணத்தால் நீக்கப்படுவதாக இருந்தால் தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கும் பெயரிலி அவர்களின் பல இடுகைகளையும் இதே காரணத்துக்காக நீங்கள் நீக்கியிருக்க வேண்டும். உண்மையில் சம்பந்தப்பட்ட இடுகையில் நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் அனைத்துமே பெயரிலி அண்ணை இதுவரை பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு இணையானது அல்லது அதை விட கொஞ்சம் காரம் குறைந்தது.

மோசமான வார்த்தைகளுக்காக ஒரு பயனரின் இடுகை நீக்கப்படுகிறது என்றால், அதே வார்த்தைகளை பயன்படுத்துபவர் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகியாகவே இருக்கிறார் என்ற முரண்பாட்டினை நினைத்தால் நகைச்சுவையாக இல்லையா? மனச்சாட்சி என்ற ஒன்றிருந்தால் தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

புரிந்துணர்தலோடு தொடரும் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்
லக்கிலுக்

43 comments:

தமிழச்சி said...

:-(

ஸ்டாலின் said...

'தூத்தேறி'என்ற வார்த்தை பயன்பாட்டினாலோ அல்லது தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கும் ‘பெயரிலியை’ விமர்சித்து பதிவிட்ட காரணத்தாலோ லக்கிலுக்கின் இடுகை நீக்கப்பட்டிருக்கிறது, காரணம் என்னவாக இருப்பினும் லக்கியின் இடுகை நீக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கதாகும், 'தூத்தேறி' என்ற வார்த்தை பயன்பாட்டிற்கென தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமெனில் அதைவிட நகைச்சுவை வேறெதுவும் இல்லை, தமிழ் வசை சொற்களிலேயே இதுதான் ஆக இழிவானதா என்பதனை 'யோனி' பதிவுகளை சூடான இடுகைகளாக வகைப்படுத்தி வந்த தமிழ்மணம் நமக்கு விளக்கியாக வேண்டும் அல்லது 'தூத்தேறி' என்ற‌ இதே சொல்லை பயண்படுத்தி இதற்கு முன்பு வந்த பதிவுகளை ஏன் நீக்கவில்லை என்பதையாவது விளக்கியாக வேண்டும்? ‘பெயரிலியை’ விமர்சித்ததுதான் இடுகை நீக்கப்பட்டதற்கான காரணம் என்றால் பெயரிலி என்ன விமர்சணத்திற்கு அப்பாற்பட்டவரா? விவாத மேடைகளை ஏற்படுத்தும் தமிழ்மணம் இது போன்ற சிறு விமர்சணங்களுக்கு கூட‌ முனகுவது முறைதானா? என்று கேள்வி எழுப்ப வேண்டியதாகிறது. மேலும் இது போல ‘அனைத்திற்கும்’ மேலாக தன்னை நிறுத்திக் கொண்டு அதிகாரம் செலுத்தும் போக்கானது, தமிழ்மணத்தில் நிலவும் ஜனநாயகச் சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் தமிழ்மணத்தை எச்சரிக்கவும் வேண்டியிருக்கிறது.

ஸ்டாலின்

லக்கிலுக் said...

ஆதரவுக்கு நன்றி தோழர் தமிழச்சி, தோழர் ஸ்டாலின்!

TBCD said...

இடுகை நீக்கியது தொடர்பாக,
எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

தெய்வமகன் said...

சகோதரா உங்கள் பதிவு நீக்கியதற்கு கண்டணம்.

ஆனால் என்னை தமிழ்மணத்தில் இருந்தே தூக்கி எறிந்து விட்டார்கள்

லக்கிலுக் said...

பெயரிலி அண்ணையின் சொந்தி இதோ! இந்த சொந்தியில் என்னை மட்டுமல்ல ஓசைசெல்லா, தமிழச்சி என்ற இதர பதிவர்கள் மீதும் சேறு வாரி பூசியிருக்கிறார். ஆதாரத்தை அழித்துவிடக்கூடிய அரிச்சந்திரன் என்பதால் இங்கேயும் போட்டு வைக்கிறேன்.

"கார்ட்டூன் கரெக்டர்களுடன் சண்டை போட்டு உன்னை இறக்கிக்கொள்ள வேண்டுமா?" என்பது சில நண்பர்களின் கருத்து. இறக்கிக்கொள்ளும் அளவுக்கு ஏறி நின்று எனக்கென்று ஒரு பீடமமைத்து, தேர்ந்தெடுத்த பிம்பம் சிதறாமல் சண்டை போடுமளவுக்கு நானிருக்கவில்லை; என் பதிவுக்கு வந்தவர்களுக்கு இஃது ஓரளவு தெரியும். அதனால், சுகுணா திவாகரும் பைத்தியக்காரனும் கார்ட்டூன் கரெக்டரினைத் திட்டியதை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை; அவர்களுக்குமிருக்காது என்று திடமாக நம்புகிறேன். பைத்தியக்காரன் யாரென்றே தெரியாது. சுகுணா திவாகரின் கவிதைகள் இப்போதும் பிடிக்கின்றபோதுங்கூட, அவர் பற்றி ஆரம்பத்திலேயிருந்த "கலகக்காரன்" பிம்பம் வெடித்துக் கலங்கலாகிச் சிதறிப் போய் கணிசமான காலம்.

முதன்மைக்கார்ட்டூன்கரெக்டர் (நைற் ஈகிள் என்ற இரவுக்கழுகு கார்ட்டூன் கரெக்டர் அல்ல) பற்றி நான் சொன்னதையிட்டு பைத்தியக்காரனும் சுகுணா திவாகரும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதால், குட்டிக்குரங்கு 'கபிஷ்' இற்கு அதன் பதிவிலே நானிட்டு, அதை பிளாக்கர் புரியாது விழுங்கிவிட்டதென்று அது எழுதிய பின்னூட்டம் அதைவிட மோசமானதென்பதைத் தெரிவித்துக் கொள்ளக்கடப்பாடுள்ளேன்; "அந்துமணிக்கு மாமாவாகவும் இணையப்பெண்பதிவர்கள் கேட்டுக்கொள்ளும் நேரத்திலே தாதாவாகவும் செயற்படும் கபிஷைவிட வார்த்தைக்கோமாளியாகவிருப்பது ஒன்றும் குறைவானதல்ல" என்று சொல்லிக்கொண்டது. முரசொலியிலே உடன்பிறப்புக்கு எழுதும் வார்த்தைகள் கோமாளித்தனமாக இன்றைய காலகட்டத்திலே மெய்யான திராவிடக்கருத்துகளைக் கொண்டவர்களுக்குத் தோன்றுகிறது; அதைப் பற்றிக் கபிஷ் என்ன நினைக்கிறதென்று சொல்லப்போவதில்லை.

கடைசியிலே ஒத்து~ஒட்டு~உளறு வீரருக்கு எதைச் சொல்வது? அவர் பற்றிய பதிவுத்திராவிடப்போராளி பிம்பம் உரிக்கப்பட்டபிறகும் அவர் நான் எழுதியவற்றை வெட்டி ஒட்டுவதை, மூத்திரச்சந்திலேயடிப்பதாக குட்டிக்குரங்கு கபிஷ் எழுதுவதை தன் வீரத்தின் வெற்றியாக அவர் கருதிக்கொண்டால், பதிவர்கள் தீர்மானிக்கட்டும்.



கார்ட்டூன் கரெக்டர்களின் "அடுத்தவன் வீட்டுக்குள்ளே வெடி போடும் கொண்டாட்டங்களுக்கு"ப் பதில் போட்டுக்கொண்டேயிருக்கமுடியாததற்கு காரணங்கள் மிக எளிதான இரண்டு.

ஒன்று, இரைச்சல் செல்லா போன்ற "நான் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரிலே போனால், கலகம்; பிளேனிலே போனால் புரட்சி" வகையிலே இரண்டு பந்திப்பதிவுபோடும் ஆளின் "அக்காவுக்கு 'கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரியும்' என்ற வழியிலே ஓடும் துக்கடாப்பதிவுகளுக்கெல்லாம், பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்; "அக்காவுக்கு கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" இவையெல்லாம் என்னை எவ்விதத்திலே பாதிக்கப்போகிறன? அக்கா பதிவுகளுக்கும் இவற்றுக்கு என்ன சம்பந்தம்? அடிதான் தீர்வா? வேண்டுமானால், ரோஜர்மூர், ஜேம்ஸ்பொண்ட் படமொன்றிலே கராத்தே வீரர்களைச் சந்தித்த விதத்தை எடுத்துச் சொல்லலாம். மிகுதிக்கு, செல்லாவின் பதிவின் பின்புலம், படம் மாற்றும் நேரத்திலே வீராங்கனையின் பதிவிலும் அதே மாதிரியான ஈயடிச்சான்கொப்பி மாற்றங்கள் வருவதைட்டு இதிலுமா ஒத்தி~ஒட்டல் என்று வியந்திருக்கிறோமென்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம். லோரல்~ஹார்டி இரட்டையர்களின் இடுகை பின்னூட்டங்கள், பின் - நவீனத்துவத்தின் உச்சக்கலகம், டாஸ்மார்க்கிலே ஒரு மிடறு சாப்பிடுவதுதான் என்பதை முன்மொழியவும் பின்வழியவும் துடித்து நிற்பவை; அப்படியே ஆகட்டும்.

இரண்டாவது, ஊரிலேயில்லை. வந்திருக்குமிடத்திலே தங்கியிக்கும் விடுதியிலே கருத்தரங்குக்கு ஓடமுன்னால், இப்போது அடிப்பதுபோல, கொஞ்சம் அடித்தாலேயுண்டு.

மூன்றாவது, "ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" வகையான ஈழநலன்களுக்கு எதிரான இந்தீயப்பதிவர்கள் இங்கே தமது வண்டிக்கு எரிபொருள் ஊற்றிக் கொள்வதற்கு இடமளிக்கவிரும்பவில்லை.


மேலே, நீட்டிக்கொண்டிருந்த இடுகைக்கு அதன் காரணமாக மட்டும் என் பதிவுக்கு வரும் வாசகர்கள் குறித்து எனக்குப் பெரிய மரியாதையில்லை. அதனால், நீக்கியிருக்கிறேன். ஆனால், நான் எழுதியது இன்னமும் இன்னொரு பதிவிலே (வெண்ணெய்வெட்டி வீராங்கனை வெட்டிப்போட்டு, விளம்பரம் தருவதைச் சொல்லவில்லை) வாசிக்க வேண்டின், கிடப்பிலே போட்டிருக்கிறேன். மேலே இடுகையிலே இணைப்பு அன்றிலிருந்து தொங்குகிறது.

இனி, தென்னாட்டு வேங்கை அண்ணாத்தைகள் புலிவேஷம் கட்டி ஆடட்டும்.

முற்றும்.

மனிதன் said...

தமிழ்மணமும்-ஜனநாயகமும்
கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

http://periyarpasarai.blogspot.com/

Anonymous said...

சுதாகர் :
தமிழ்மணம் வாசகன் என்ற உரிமையில் இதை வண்மையாக கண்டிக்கிறேன்.

மனிதன் said...

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்





உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்



க.இரமணிதரன்

தமிழ்மணம்

லக்கிலுக் said...

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

rajavanaj said...

//தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின்,//

நீங்கள் செய்தது தனிமனித தாக்குதல் என்றால், ரமணீதரன் தனது பதிவில் எழுதியுள்ள விதமும் தனிமனித தாக்குதலே. படு அயோக்கியத்தனமான அணுமுறையை ரமணீதரன் கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது பதிவுகளுக்கு ஒரு அளவுகோலும் பிறர் பதிவுகளுக்கு ஒரு அளவுகோலும் கொண்டுள்ள ஒருவர் நிர்வாகியாக இருப்பது கேலிக்குரியதாய் இருக்கிறது. இதில் தாம் கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தியிருப்பதாக வெட்டிப் பீலா வேறு..

தனது பதிவில் அடுத்தவரை தாக்கி எழுதிவிட்டு அதற்கு பதிலளித்த பதிவை மட்டும் தனிமனித தாக்குதல் என்னும் பெயரில் தானே விலக்கும் கேடுகெட்ட இந்த ஜனநாயகமற்ற ரமணிதரனின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ராஜாவனஜ்

முரளி கண்ணன் said...

தமிழ்மனத்துக்கு எதிரான கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்

வரவனையான் said...

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைத்து, எழுதியும், வாசித்தும் வருபவன் என்கிற வகையில் வலையுலகின் முன்ணனி பதிவரான லக்கிலுக்கின் பதிவினை தனிமனித விரோதத்தையும் தனிமனித வெறுப்பின் அடிப்படையிலும் தமிழ்மணத்தினை விட்டு நீக்கியதுமில்லாமல் தொடர்ந்து ஏதோச்சதிகாரகுரலில் நிர்வாகத்திடமிருந்து வந்திருக்கும் மிரட்டலினையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

லக்கிலுக் said...

ஆதரவுக்கு நன்றி நண்பர்களே!

பெயரிலி என்ற தனிமனிதர் தன்னுடைய தனிமனித விரோதத்துக்கு தமிழ்மணத்தை பயன்படுத்தி பழி தீர்க்கிறார் என்பதை மட்டுமாவது தமிழ்மணத்தின் இதர நிர்வாகிகள் புரிந்துகொண்டால் சரி. இல்லை உன்னை தமிழ்மணத்தை விட்டு தூக்கதான் போகிறோம் என்றால் சரி, நான் வேறென்ன செய்யமுடியும்?

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தமிழ்மணத்துக்கு அழிவு வந்தால் அது பெயரிலியால் மட்டுமே!!! :-)

Anonymous said...

அது கண்டிப்பாக தமிழ்மணத்திலிருந்தோ அல்லது பெயரிலியிடமிருந்தோ வந்த மெயில்தானா?

உறுதியாக தெரியுமா?

ஏனெனில் இந்த மாதிரி நேரங்களில் சந்தில் சிந்து பாட பல பேர் இருக்கிறார்கள்

தெய்வமகன் said...

தமிழ்மணத்தில் இருந்து தமிழச்சி நீக்கம்?

தமிழச்சியின் பதிவுகள் எங்கே?


ஒன்றுமே புரியலே உலகத்திலே... காலையில்தான் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தேன். நேரமின்மையால் படிக்க இயலவில்லை. வந்து பார்த்தால் தமிழச்சியின் பதிவுகள் திரட்டியில் காணப்படவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?






http://osaichella.blogspot.com/2008/03/blog-post_9922.html

ஜெகதீசன் said...

உங்களின் இடுகைகளை நீக்கியதற்கு என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்...
:(((

விடாதுகருப்பு said...

பெயரிலியின் சர்வாதிகார போக்கினை கண்டித்து எனது எதிர்ப்பினை இங்கே பதிவு செய்வதோடு அதனை தனிப்பதிவாகவும் இடுகிறேன்!

ஜூட் said...

தமிழ்மண நிர்வாகம் இலங்கை வலைப் பதிவாளர்களைப் புறக்கணிக்கின்றது. நீண்டகாலமாக எந்த இலங்கை வலைப்பதிவாளர்களினதும் பதிவுகள் நட்சத்திரவாரத்தில் இடம் பெறவில்லை. ஏன் இந்த மாற்றான் தாய் மனப்பான்மை. ஒரு சில புலம் பெயர் இலங்கைப் பதிவாளர்கள் நட்சத்திர வாரத்தில் உலாவந்தார்கள் ஆனால் எந்தவொரு இலங்கை மண்ணில் வாழும் வலைப்பதிவாளர்கள் இதுவரை வரவில்லை. உடுவை, டாக்டர் முருகானந்தன், மாயா, நிர்ஷன்ம் ரிஷான் ஷெரிப் என பல நல்ல பதிவாளர்கள் இருக்கிறார்கள்.

லக்கிலுக் said...

மு.சுந்தரமூர்த்தி பெயரில் இவ்விடுகைக்கு வந்த இரு பின்னூட்டங்களை மட்டுறுத்தி வைத்திருக்கிறேன். அவற்றை உண்மையான சுந்தரமூர்த்தி தான் இட்டாரா என்பது உறுதி செய்யப்படாத வரைக்கும் அப்பின்னூட்டங்களை மட்டுறுத்தியே வைத்திருப்பேன். சுந்தரமூர்த்தி அவர்களது மின்னஞ்சல் கைவசம் இல்லாததால் அவர் தான் அந்த பின்னூட்டங்களை இட்டாரா என்பது தெரியவில்லை :-(

SurveySan said...

ஹ்ம். ஒண்ணும் சரியில்லயே :(

ஆனா ஒண்ணு, முண்டம் அது இதுன்னு ஒருமையில் கும்முவதை நீங்களும் தவிர்த்திருக்கலாம்.

பெயரிலிப் பதிவரும், நையாண்டிகளைக் குறைத்திருக்கலாம்.

என்னதான் இருந்தாலும், 'ஈகோ'ல இடிச்சா, யார்தான் சும்மா இருப்பாங்க ? :)



பி.கு: தெய்வமகன் பதிவுகள் தூக்கப்பட்டது தவறில்லை ;)

குசும்பன் said...

ஏன் நீக்கினீங்க என்ற கேட்ட இந்த போஸ்டையும் நீக்கியது சரியான செயல் அல்ல.:(((

தெய்வமகன் said...

//SurveySan said
பி.கு: தெய்வமகன் பதிவுகள் தூக்கப்பட்டது தவறில்லை//

வாங்க பங்காளி ஏதாவதும் சொத்து பிரச்சனை இருந்த பேசி தீத்துக்கலாம்.அதுக்காக இப்படி அருவாலக்கொண்டு வந்து வெட்டறது சரியில்ல

SurveySan said...

சொல்ல மறந்துட்டேன்.

ஏன் நீக்கனீங்கன்னு கேட்டு போட்ட இந்தப் பதிவையும் நீக்கினது ரொம்ப ஓவர்.

அதற்கு என் கண்டனங்களை பதிகிறேன்.

முத்துகுமரன் said...

உங்கள் இடுகைகளும், தமிழச்சியின் பதிவுகளையும் நீக்கியிருக்கும் செயல் கடும் கண்டணத்திற்குரியது. ஒருவரின் விருப்பு வெறுப்புகளின் படிதான் தமிழ்மணம் இயங்கும் என்றால் அது வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது என்றே அர்த்தம். நிர்வாகத்தினர் இந்த தவறை களைய வேண்டும்.

SurveySan said...

தெய்வமகன்,

///வாங்க பங்காளி ஏதாவதும் சொத்து பிரச்சனை இருந்த பேசி தீத்துக்கலாம்.அதுக்காக இப்படி அருவாலக்கொண்டு வந்து வெட்டறது சரியில்ல
///

:) மனசுல பட்டத சொன்னேங்க. உங்க பதிவுகள் பலவும் முகம் சுளிக்க வைக்கும் ரகம். எழுதுவதில் தவறில்லை, ஆனா, எல்லா வயதினரும் புழங்கும், த.மணத்துல அப்பட்டமா தெரியணுமான்னு மனசுல ஒரு கேள்வி இருந்தது.

bala said...

தமிழ்மணமே ஒரு கேவலமான தீவிரவாதியாக இருந்த தாடிக்காரனின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படுகிறது.இந்த அழகுல, அந்த பொறிக்கியின் ஒரு சிஷ்யப் பொறிக்கி அதே குருவோட இன்னொரு சிஷ்யப் பொறிக்கியை, பொறிக்கி என்று ஏசியது தாடிக்காரன் செய்த பொறிக்கித் தனத்தை விட கேவலமான பொறிக்கித் தனம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறோம்.பாரிஸ் முனியம்மா அக்காவை தமிழ் மணத்திலிருந்து தூக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாலா

தெய்வமகன் said...

//SurveySan said...

மனசுல பட்டத சொன்னேங்க. உங்க பதிவுகள் பலவும் முகம் சுளிக்க வைக்கும் ரகம். எழுதுவதில் தவறில்லை, ஆனா, எல்லா வயதினரும் புழங்கும், த.மணத்துல அப்பட்டமா தெரியணுமான்னு மனசுல ஒரு கேள்வி இருந்தது.//


என்ன நண்பரே நான் பதித்த பதிவுகள் தமிழ்மணத்தில் வேறு பதிவர்களால் பதிக்கப்பட்ட கட்டுரைகளே.அதில் உள்ளே இருந்த வார்த்தைகள் என் தலைப்பாக மாறினது.

சரி தவறாக இரூக்கட்டும்.அதை ஏன் எச்சரிப்பு செய்யவில்லை.ஒரு வேளை குறிப்பி அந்த பதிவை மட்டும் நீக்கி என்னை எச்சரித்து இருக்கலாம் இல்லீயா.


தமிழ்மண பதிவர இருந்தேன் எனபதினால் தான் இந்த கேள்வி.அவர்கள் எச்சரித்த பின் நான் தொடர்ந்திருந்தால் இந்த நீக்கம் சரியானதே.ஆனால் அப்படி நடக்க வில்லையே அதைத்தானே கேக்கரரேன்.

அரை பிளேடு said...

ஒரு மனுசன் வணக்கம் சொல்லி விளக்கம் சொல்லி அன்புடன் அப்படின்னு போட்டு முடிச்ச பதிவை கூடவா நீக்குவாங்க.


என்ன நடக்குது இங்கே.

??????????

Anonymous said...

இந்த பதிவை நீக்கியாச்சு என்றீங்க - ஆனா தமிழ்மணத்தில வருகிறதே ?

அதர் ஆப்சன்களினூடு வரும் மெயில்களூடுதான் சிந்தை தௌpகிறீர்களோ ?

கோவி.கண்ணன் said...

என் பெயரைக் குறிப்பிட்டு தனிமனித தாக்குதலாக எழுதப்பட்ட பதிவுகள் தமிழ்மணத்தில் வந்த போது நான் தமிழ்மணத்தில் புகார் எதையும் செய்யவில்லை.

அவர்களாகவும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு ஒரு பதிவரைப் பற்றி எழுதியதற்காக சில பதிவர்களின் பதிவுகள் இடுகைகள் தூக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழ்மணத்தின் செயல் புரியவில்லை.
தமிழ்மணதிரட்டி குழுவினரின் நடவெடிக்கை என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தனிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு என்றால் அவரும் ஒரு பதிவர் தானே. யோசித்து இருக்கலாம்.

யார் யார் கூட சண்டைப் போட்டாலும் யாரையும் தமிழ்மணம் நீக்குவதை பொதுவாக எவருமே விரும்புவதில்லை. சில பதிவர்கள் மிக மோசமாக எழுதினால் பதிவர்களே புறக்கணிக்கச் செய்கிறார்கள்.

எந்த பதிவரையும் தமிழ்மணம் நீக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே போன்று தமிழ்மணத்தை மட்டும் குறைசொல்லவும் முடியவில்லை.

பதிவர் பக்கமும் குறை இருக்கிறது, பரபரப்புக்காக என்று எழுதப்படும், பகடி செய்யும் பதிவுகளை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதற்காகவே பதிவர்களும் அப்படி எழுதுகிறார்கள். பதிவர்களும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதுவதும் உண்டு, அதை பதிவர்களால் அடையாளம் காணமுடியும்.

ரொம்ப வழவழவென இருக்கா ?

பதிவர்களிடையே புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்ற காரணத்தை அந்த இடுகைகள், பதிவுகள் மீறுவதாக - நினைத்த நடவடிக்கை என்றில்லாமல் வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நடவெடிக்கையை தமிழ்மணம் செய்திருந்தால்
தமிழ்மணத்தின் இந்த செயல்
ஞாயமற்றது !

ராவணன் said...

தனியார் நிறுவனத்தில் ஜனநாயகமா?
கருத்துச் சுதந்திரமா?

ஜனநாயகக் கட்சிகள் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்யும் திமுக,அ.இ.அண்ணா திமுக,
இ.காங்,பி.ஜெ.பி,பா.ம.க,மறுமலர்ச்சி திமுக போன்ற இயக்கங்களில் மருந்துக்காவது ஜனநாயகமும்,
கருத்துச் சுதந்திரமும் உள்ளதா?
தலைவரை பொதுவில் விமர்சனம் செய்ய இயலுமா?

மணக்கும் தமிழை மட்டும் கேள்விகள் கேட்க என்ன உரிமை உள்ளது?

மீதி நாளை.. நம்ம வீட்டாண்டை..வரட்டா...

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் said...

பொதுநிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் இருப்பது போல், இங்கு பதிவர் சங்கங்கள் இருந்திருந்தால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நியாயம் கேட்டு போராட வாய்ப்பு இருக்கும்.

Anonymous said...

தமிழ்மண நிர்வாகம் இப்பவாவது விழித்துக் கொண்டதே. தமிழில் கண்ணியம் என்ற ஒரு சொல்லுக்கு தமிழ் மணத்தில் பதிவு செய்யும் வலைப்பதவர் பலருக்கு அர்த்தம் புரிவதில்லை. குறிப்பாக தமிழச்சி போன்ற விளம்பர நோக்கில் பதிவிடும் பதிவர்களின் பதிவுகளையும் தமிழ்மண நிர்வாகம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆங்கில தளங்களிலேயே பல சொற்கள் "பில்ரர்" செய்யப்படும் போது தமிழில் மட்டும் கெட்டவார்த்தைகளைப் பாவிப்பது புரட்சியாக ஜனநாயக சூழலாக சித்தரிக்கப்படுவது வருந்தத்தக்க ஒன்று. இது செம்மொழியாம் தமிழ் மொழியின் அழிவுக்கு ஒத்திசையும் ஒரு செயலாகும்.

எனவே நண்பர் லக்கி லுக்குக்கு உணர்த்தியது போன்று இதர வலைப்பதிவர்களையும் அவர்களின் தவறுகள் தொடர்பில் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

நண்பர் லக்கி லுக் எனி இப்படிப் பதிவிடுவதை தவிர்த்து தமிழ்மணத்துக்கு ஒத்துழைப்பார் என்றே நம்புகின்றோம்.

Anonymous said...

யார் யாரோச் சொல்றாங்க என்று நாமும் சொல்லக்கூடாது.
நாம எழுத வந்ததே அவதூறு பேசத்தான்.
நாம் எழுதினது தமிழ் முஸ்லீம் என்ற பெயரில் தமிழ் முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தக்கும் எதிராக.
தமிழ் முஸ்லீம்களுக்காக என்ற பெயரில் எழுதியிருந்தாலாவது ஏதாவது பேசலாம்.
ஒதை வாங்கும் முன்னே ஓடிடு சாத்தானே - நீ மகனல்ல, தெய்வ எதிரி.

தெய்வமகன் said...

//தமிழ் முஸ்லீம் என்ற பெயரில் தமிழ் முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தக்கும் எதிராக.
தமிழ் முஸ்லீம்களுக்காக என்ற பெயரில் எழுதியிருந்தாலாவது ஏதாவது பேசலாம்.
ஒதை வாங்கும் முன்னே ஓடிடு சாத்தானே - நீ மகனல்ல, தெய்வ எதிரி.//


ஏப்ப உங்களுக்கு இந்த கொலைவேறி.மொதல்ல ஒருத்தரு அருவாளை தூக்கிட்டு வந்தார் அவராவதும் பரவாயில்லை.நீ என்னடான்ன அனுகுண்ட தூக்கிட்டு ஒடி வர படவ ஜிஹாதி.

ஏன் இப்ப நான் எழுதரத யாரும் படிக்க மாட்டாங்களா?போய் உன் வேலைய பாருப்பா

தேரியூரான் said...

என் கண்டனங்கள் இங்கே!!
http://theeriyuuraan.blogspot.com/2008/03/blog-post.html
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை!!!
_______________
மன்னிக்கவும்! உங்கள் பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை.

உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.

உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்

பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும

TBCD said...

உங்களுக்கு பெரிய மனசு, ஓசை செல்லா, தரக்குறைவாக இட்ட இடுகையயை நீக்க, மஞ்சப் பொத்தானை அமுக்கி புகார் செஞ்சேன்.

அதுக்கு பதில் கூட இல்லை.

என் வருத்தம், அதை கவனிக்கப் போறதில்லை என்றால், வீணாக ஏன் ஒரு பொத்தானை வைச்சு, அதில் ஒரு படிவம் தரனும்..

ஒன்னும் புரியல்ல.த.செ.விளக்குவாங்களா
///
கோவி.கண்ணன் said...

என் பெயரைக் குறிப்பிட்டு தனிமனித தாக்குதலாக எழுதப்பட்ட பதிவுகள் தமிழ்மணத்தில் வந்த போது நான் தமிழ்மணத்தில் புகார் எதையும் செய்யவில்லை.
///

Hitler said...

லக்கிலுக் சாரு!

தமிழச்சி தன்னைக் காப்பாத்த சாருக்கு ஆதரவு தாறாங்க. ரொம்ப ஜாக்கிறதையா இருப்பா. ஆத்தா உன்னையும் வம்புக்குள்ள இழுத்திடும்.

வவ்வால் said...

தாமதமாக வந்து இருக்கேன் போல,பதிவுகளை நீக்குவதில் எனக்கு எப்போதும் உடன் பாடு இல்லை, அதிலும் பதிவெல்லாம் நீக்குமளவுக்கு லக்கி என்ன செய்தார் புரியலை தயவு செய்து விளக்கவும்! :-))(நன்றி:திபிசிடி)

ஆனால் உங்கள் பதிவு தமிழ் மணத்தில் தெரிகிறதே ஒரே கொயப்பமா இருக்கு!

முருகேசர் said...

பதிவு நீக்கப்படாமலே நீக்கப்படதாகாக் கூறி பதி விடுவதையும் அதனைத் தீர விசாரிக்காமால் கண்டனம் பதியும் பதிவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

லக்கி,

என்ன நடந்தாலும் தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீங்களோ, ஓசை செல்லாவோ உங்களுடைய வலைப்பதிவுகளை விலக்கிக்கொள்ளாதீர்கள். இது ஏனைய திராவிட வலைப்பதிவர்களுக்கும் பொருந்தும். நீங்களெல்லாம் எப்போது விலகுவீர்கள் என்றுதான் தமிழ்மணத்தை நிர்வாகம் செய்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சங்கரபாண்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையைத் தமிழ்மணம் வலைப்பதிவில் கண்டிருப்பீர்கள். அப்படி விலகுவதாகத் தீர்மானித்தீர்களென்றால் ஒட்டுமொத்தமாக 40-50 பேர் விலகுங்கள். காத்திரமான இடுகைகள் இல்லாவிட்டால் தமிழ்மணம் ஏது? ஒரு திரட்டி அதன் பயனாளர்களால் மட்டுமே வலுவாகிறது. பயனாளர்கள் இருவகைப்படுவார்கள். ஒன்று, வாசகர்கள். 2, வாசகர்களை கவர்ந்திழுக்க வேண்டிய content providers. இங்கே content providers வலைப்பதிவர்கள். வலைப்பதிவர்கள் இல்லையென்றால் எந்த contentஐக் காட்டி வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் போகிறார்கள்? ஆனால், வலைப்பதிவர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும்போக்கு தமிழ்மணத்தில் வலுத்து வருகிறது. இதை வலைப்பதிவர்கள் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் தமிழ்மணத்தில் வரும் பதிவுகளைக் கருதவேண்டும். தனிமனித விரோதத்துடன் நேரடியாக வாதத்தில் இறங்கத் திராணியில்லாமல் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் போக்கை நாமெல்லோரும் கண்டிக்க வேண்டும். வெறும் கண்டிப்போடு அல்லாமல் செயலிலும் காட்ட வேண்டும். மார்ச் 30 நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் இதுபற்றிப் பேசுவோம் தோழர்களே. சினிமாத்துறையினர் வலைப்பதிவுகளுக்கு பூட்டுப்போட விரும்புவற்கும் தமிழ்மணத்தின் போக்கிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

விரைவில் தமிழ்மணம் அறிமுகப்படுத்த இருக்கும் 'தெரிவு'ம் பயனர்களின் கைகளிலேயே இருக்கிறது. 'தெரிவு', பூங்கா வலையிதழுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுவதாகத் தெரிகிறது. பூங்கா வலையிதழை ஒவ்வொரு வாரமும் கொண்டு வருவதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டதால் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். இப்போது புதிய வடிவத்தில் வாசகர்களையே தொழிலாளர்களாகப் பயன்படுத்தி CONTENT generate பண்ணவிருக்கிறார்கள். வலைப்பதிவர்களும் மாங்குமாங்கென்று உழைத்து 'தெரிவை'ப்பிரபலப்படுத்தியதும் சக்கையைத் துப்புவதுபோல துப்பித் துடைப்பத்தால் தள்ளிவிடுவார்கள்.

கவனமாக, விழிப்புடன் இருங்கள் தோழர்களே!

லக்கĬ