
எல்டாம்ஸ் ரோடு பாடாவதி பாரில் தண்ணியடித்து வாந்தி எடுத்து கொண்டிருந்தபோது பக்கத்தில் வாந்தி எடுத்த குடிகாரர் ஒருவர் எடுத்த வாந்தி இது.
“நீங்கள் ஏன் “மப்பு வெள்ளி” என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள் முழுக்க தண்ணியடிக்க கூடாது? வாரநாட்களில் தினமும் சரக்கடித்தாலும் வெள்ளிக்கிழமை ஒரு புல் ஓல்டு மாங்கு அடித்து வாந்தி எடுத்தால் போதை சும்மா ஏறுமில்ல.
தேனாம்பேட்டையில், நுங்கம்பாக்கத்தில், வளசரவாக்கத்தில் என எல்லா பாரிலும் பெரும்பாலானவர்கள் வெயில் தாங்காமல் அடிப்பது பீரு தான். அதுவும் நீங்கள் ரம் அடித்துவிட்டு வாந்தி எடுத்து சொந்தி (சொல் + வாந்தி - சொல்லால் எடுக்கும் வாந்தி) அடித்தால் குடிகாரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது ரம் அடித்தால் நல்லது, அதிகபட்சம் நாலு குவார்ட்டர் (அல்லது ஒரே புல்) அடித்துவிட்டு பீர், ரம், விஸ்கி, பிராந்தி, சுண்டக்கஞ்சி, சல்பேட்டா என எதைப் பற்றியும் சொந்தி அடிக்கலாம். உதாரணத்திற்கு பெசண்ட் நகர் முனியம்மாவின் சுண்டக்கஞ்சி பாரில் கோடியுடன் எடுத்த வாந்தி, பள்ளிக்கரணையில் கல் அடித்துவிட்டு கல்லால் அடிபட்டது, சரக்கடித்துவிட்டு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய் சுண்டலை சைட் டிஷ்ஷாக கேட்டது, டோல்கேட்டில் டோபு அடித்தது இதைப் பற்றியெல்லாம் சொந்தி அடித்தால் குடிகாரர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்களை பெற்றுத்தரும். மேலும் சரக்குலகில் இதுவரை யாரும் எடுக்காத வாந்தி இது.
பதிவுத் தலைப்புகள் காண்டு எடுத்த வாந்தி கம் சொந்தி - 14 மார்ச்சு 2008, அசோக் நகர் உதயம் தியேட்டருக்கு பக்கத்து பாரு என்று வரலாம்.
உங்களோடு சேர்ந்து சிறப்பாக வாந்தி எடுப்பவருக்கு ஊறுகாய் வாங்கி தரலாம் அல்லது குவார்ட்டரோ, ஹாஃப்போ (துட்டு இருந்தால்) வாங்கி கொடுக்கலாம். காண்டு சொந்தி என ஒரு Brand உருவாக்கலாம்.
பிரியாமணியின் ஸ்கர்ட் லெவலுக்கு போதை அபாயகரமாக ஏற வாழ்த்துக்கள்.
இதோ சில கேள்விகள்
1. காண்டு, சுண்டக்கஞ்சி குடத்துக்கு ரூ.1.25 குறைப்பாம்? நீங்க எப்போ சுண்டக்கஞ்சி வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள்?
2. கால் சென்டரில் வேலை பார்த்தால் ரெண்டு கால் சென்டருக்கு ஏதாவது ஆபத்து வருமா?
3. உங்கள் அத்திம்பேர்/மாமா உங்களுடன் தண்ணி அடிக்கிறார்களா? அவர்கள் வாந்தி எடுப்பது இல்லையா?
4. பல குடிகாரர்களோடு குடித்து வாந்தி எடுக்கும் நீங்கள் இன்னமும் காஞ்சிபுரம் குடிகாரன் இருள்நீக்கிசுப்புணி அய்யரோடு தண்ணி அடித்ததில்லையா? நங்கநல்லூரிலிருந்து காஞ்சிபுரம் சமீபத்தில் 78 கிலோ மீட்டர் தூரத்தில் தானே இருக்கிறது?
5. பரம்பரை குடிகாரர்கள் ஏன் மற்ற குடிகாரர்களை கூட சேர்த்து தண்ணி அடிப்பதில்லை? (ஒரு லெவலுக்கு மேல் சரக்கு அடித்ததும் வாந்தி எடுத்துவிடுவார்கள்)”
இப்போது காண்டு கஜேந்திரன். ஸ்காட்சுக்கு ஊறுகாய் தொட்டு கொண்டால் சரியாக வருமா எனத் தெரியவில்லை. ஏற்கனவே குடிகாரன் கோடியுடன் சேர்ந்து நானும் வாந்தி எடுத்ததுதான்.
நீங்கள் எப்படி குடிக்கிறீர்கள்? ரொம்பவும் வாந்தி எடுக்கிறீர்களா? இப்பதிவில் பின்னூட்டமாக நீங்கள் வாந்தி எடுத்து வைக்கலாம். ஷகீலா / பரங்கிமலை ஜோதி குறித்த வாந்திகள் இங்கே அனுமதிக்கப்படாது. ஒரு குவார்ட்டர் உட்டுவிட்டு நாளை மீண்டும் வந்து ஃபுல் அடிக்கிறேன்.
அன்புடன்,
காண்டு கஜேந்திரன்
குடிகாரன் காண்டு கஜேந்திரனுடன் தண்ணி அடிப்போமா?
Subscribe to:
Post Comments (Atom)


-க்ளிக்கி வாசிக்கவும்!
6 பின்னூட்டங்கள்:
யோவ் லக்கி இன்னாய்யா மன்சுல நெனச்சின்னு இருக்க, அந்த காண்டுவும் , நீயும் அண்டர்கிரவுண்ட்ல பார்ட்னரா இருந்துகினு இப்படி நீ பதிவு போடு அதுக்கு கவுண்டர் கொடுத்து நான் இப்படி போடுறேன்னூ ஊரே பேசிக்குதே அது மெய்யாலுமே நெசமா? அப்படித்தானே இருக்கு ஒன் பதிவு மேட்டர் எல்லாம்.
(ஆனானப்பட்ட வவ்வாலே கேள்விப்பதில் போடலை நீ எல்லாம் ஆசைப்படலாமான்னு கேட்டிருந்தா நானும் உன் கட்சில சேர்ந்திருப்பேன்)
எப்படியோ அடுத்தவன் டவுசரை அவுக்காம தூக்கம் வராது போல!
//யோவ் லக்கி இன்னாய்யா மன்சுல நெனச்சின்னு இருக்க, அந்த காண்டுவும் , நீயும் அண்டர்கிரவுண்ட்ல பார்ட்னரா இருந்துகினு இப்படி நீ பதிவு போடு அதுக்கு கவுண்டர் கொடுத்து நான் இப்படி போடுறேன்னூ ஊரே பேசிக்குதே //
Repeateeeeeeeaaaaaaaay!!!!!!!
//கால் சென்டரில் வேலை பார்த்தால் ரெண்டு கால் சென்டருக்கு ஏதாவது ஆபத்து வருமா?//
:))))
//சமீபத்தில் 78 கிலோ மீட்டர் தூரத்தில் //
சமீபம் அல்ல அருகில், சமீபம் காலத்தை குறிப்பது, அருகில் தூரத்தை குறிப்பது
//நீங்கள் எப்படி குடிக்கிறீர்கள்? ரொம்பவும் வாந்தி எடுக்கிறீர்களா?//
தினமும் அடிப்பதில்லை. சனி ஞாயிறு விடுமுறை என்பதால், வாரம் இருமுறை மட்டும்.
பிராந்தி மட்டுமே, வாந்தி எடுக்கும் பழக்கமில்லை ஆனால் சொந்தி எடுக்கும் பழக்கமுண்டு.அதனால் என்னுடன் தண்ணி அடிக்க நினைப்பவர்கள் காதில் இயர் போனோடு வருவது நல்லது.
வால்பையன்
எங்கெங்கு நோக்கினும் மொக்கையடா.
மாட்டிக் கொள்ளும் மானிடர் சக்கையடா.
:)
//பள்ளிக்கரணையில் கல் அடித்துவிட்டு கல்லால் அடிபட்டது//
அடித்தது கல்லா? கள்ளா?
//யோவ் லக்கி இன்னாய்யா மன்சுல நெனச்சின்னு இருக்க, அந்த காண்டுவும் , நீயும் அண்டர்கிரவுண்ட்ல பார்ட்னரா இருந்துகினு இப்படி நீ பதிவு போடு அதுக்கு கவுண்டர் கொடுத்து நான் இப்படி போடுறேன்னூ ஊரே பேசிக்குதே அது மெய்யாலுமே நெசமா?//
வாழு, வாழவிடு.
//கால் சென்டரில் வேலை பார்த்தால் ரெண்டு கால் சென்டருக்கு ஏதாவது ஆபத்து வருமா?//
:))))
வெறுமனே வேலையைப் பாத்தோமா போனோமான்னு இல்லாம பக்கத்துசீட்டு ஃபிகருடன் கசமுசா பண்ணினால் அந்த செண்டருக்கு ஆபத்து வரலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment