
சென்ற வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் ஜெ. சென்னையில் எந்த சாலைக்கு சென்றாலும் கருப்புப்பூனை பாதுகாவலோடு ஜெ.வை பார்க்க முடிந்தது. அதிமுக இளைஞர் பாசறையை தொடங்கிய கையோடு சென்னையின் ஒவ்வொரு கிளைக்கும் 'திடுக்' விசிட் அடிக்கிறாரோ என்று நினைத்த அதிமுக தொண்டர்களை ஏமாற்றினார் ஜெ.
மாறாக ஜெ. தனக்கு 'வேண்டியவர்களை' சந்தித்து சமீபத்தில் நிறைவடைந்த தனது அறுபதாவது பிறந்தநாளுக்கு ஆசி வாங்கிக் கொண்டிருந்தார். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, பத்திரிகையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளரும் காங்கிரஸ் பிரமுகருமான முக்தா வி.சீனிவாசன், நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி, ஜெ.வுக்கு நடனம் கற்றுத் தந்த கே.ஜி.சரஸா, நடிகர் நம்பியார் போன்றவர்களின் வீடு தேடி சென்று ஆசி பெற்றார் ஜெ.
ஜெ.வின் இந்த திடீர் ஆசிர்வாத விசிட் பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் கட்சிக்காரர்களை மிக அதிகமாக ஆச்சரியப்பட வைத்தது. கட்சிக்காரர்கள் தன் காலில் விழுவதை மகிழ்ச்சியோடு சிரித்து ரசிக்கும் மனோபாவம் கொண்ட ஜெ. மற்றவர்கள் முன் ஆசிர்வாதம் பெற தலைகுனிந்தது அனேகமாக அவர் அரசியலுக்கு வந்து இதுவே முதன்முறையாக இருக்கும்.
நடிகர் நம்பியாரின் வீட்டில் நம்பியாரிடம் ஆசிபெற்றவுடன் அங்கே வந்திருந்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்குடன் தனியறையில் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக கிசுகிசுக்கப் படுகிறது. நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார் தமிழக பாஜகவில் முக்கியப் பதவியில் இருப்பதால் அவர் தான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்கிறார்கள்.
அதிமுக தலைமை, பாஜ கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் காட்டாத நிலையிலேயே இல.கணேசன் போன்ற தமிழக பாஜக தலைவர்கள் அம்மா காலில் விழுந்து எழ பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜெ - ஜஸ்வந்த்சிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் என்று தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
வரும் அக்டோபரில் பாராளுமன்றத் தேர்தல் வரும் என்று கூறப்படும் நிலையில் நாட்டிலேயே முதன்முதலாக அத்தேர்தலுக்கான பணிகளை ஜெ. தொடங்கியிருக்கிறார். அம்மாவா? கொக்கா? என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
சோவிடம் ஆசி வாங்கிய ஜெ! - ஸ்பாட் ரிப்போர்ட்!!
Subscribe to:
Post Comments (Atom)


-க்ளிக்கி வாசிக்கவும்!
9 comments:
7 பேர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா, எழு கோடி பேரும் உங்க காலில் சரணாகதி என்று எவனோ புருடா விட்டு இருக்கான்..
அதை உண்மை என்று நம்பி தங்கத் தாரகை 7 பேருக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்திருக்கார்..
பின்னே அவங்களை நல்லா இருன்னு, மனசார வாழ்த்துறது எவ்வளவு சிரமமான காரியம்.. :))))))))))))
சிறு திருத்தங்கள்:
1. திரு ஒய்.ஜி பார்த்தசாரதி இன்று இல்லை; அவரது மனைவி ஆசி பெற்றிருக்கிறார்.
2. கே.ஜி சரஸா... அவரது நடன ஆசிரியர்
அறுபதிற்குப் பிறகு பணிவுடமை வந்துள்ளது (?). எத்தனை வயதில் இன்சொலன் ஆவாரோ ?
மற்றதெல்லாம் அணியல்ல என என்று உணர்வாரோ ?
திருத்திவிட்டேன் மணியன். நன்றி! :-)
// அம்மாவா? கொக்கா? என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். //
இலைக்காரனில் போட வேண்டிய பதிவை மாற்றிப் போட்டுவிட்டீர்களா? ;)
அய்ம்பதிலும் ஆசை வரும்
அறுபதிலும் அடக்கம் வரும்
ஆசையுடன் தேர்தல் வரும்
கூட்டணியில் காசும் வரும்
கூட்டமெல்லாம் தானே வரும்
ஓட்டுக்குத்தான் மோசம் என்றே
ஓடி ஓடிக் கேட்கலாமே!
கும்புடப்போன இடத்துல ......க்குள்ள
கைய விட்டுட்டாருன்னு நாளப்பின்ன சொல்லாம இருந்தா சரி.
அப்படியே அந்த 84வயது முதியவர் கிட்டயும் வாங்கியிருந்தா!!! தமிழ்நாடு உருப்பட்டுவிடும்...
இதைப் பார்த்த போது. சில வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் மாறி மாறி துக்ளக்கில் வாராவாரம்
எழுதிய நக்கல் கடிதங்கள் ஞாபகம் வந்தது.பறணில் கிடக்கிறது; தேடியெடுத்தால் தமிழ்மண வாசகர்களை
ஒரு மாதமாவது சிரிக்க வைக்கலாம். அவ்வளவு காமேடி போங்க.
நல்லா இருங்க....
அம்மா காலில் விழும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்து விட்டார் போல. முன்னாள், வருங்கால அதிமுக அமைச்சர்களே அம்மா வழியை கடைபிடிக்க தயார் ஆகுங்கள்!
Post a Comment