கட்டைப் பிரம்மச்சாரியாக இருப்பதினால் என்ன பயன்?


ரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது.

அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார்.

“குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?”

“பெண் தொடர்பு!”

“புரியவில்லை?”

“ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு அழைத்துச் செல்லப்படுவான்”

“ஆஹா. அருமை!!”

“உடல்தேவைக்காக இல்வாழ்க்கையில் ஒரு பத்தினியோடு இணைபவன் ஒரு சாதாரண ரதத்தில் பத்து பேரோடு ஒருவராக நெருக்கமாக உட்கார வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவான்!”

“சரி குருவே!”

“பத்தினி தவிர்த்து பலரோடு உடல்தொடர்பான உறவு வைத்துக் கொள்பவன் பல நூறு பேரோடு நெருக்கமாக அடைக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் எந்த மரியாதையும் இன்றி அழைத்துச் செல்லப்படுவான்”

“அப்படிப்பட்ட ஒரு பிழைப்பு தேவையா?”

“அடுத்தவன் மனைவியை அபகரித்தவன், ஆயிரக்கணக்கான பெண்களோடு இழித்தொடர்பு வைத்திருந்தவன் கல்லும், முள்ளும் நிறைந்த நெருப்புப் பாதையில், கிங்கரர்கள் சாட்டையால் அடிக்க வண்டியை இழுக்கும் மாடு போல மற்றவர்களின் பாரங்களை சுமந்து செருப்பில்லாமல் நடந்தே மேலுலகத்துக்கு செல்லவேண்டும்”

“அய்யய்யோ. அப்படிப்பட்ட நிலை யாருக்குமே வரக்கூடாது. குருவே! நான் அலங்கரிக்கப்பட்ட ரதத்திலேயே மேலுலகுக்கு செல்ல விரும்புகிறேன்”



காலச்சக்கரம் உருண்டோண்டுகிறது.

காலம் முழுக்க பிரம்மச்சாரியாக இருந்தவர் இயற்கையாக மரணம் அடைகிறார். மேலுலகத்துக்கு அழைத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் வந்திருக்கிறது.

தேவகன்னிகைகள் அவரை குளிப்பாட்டி உடலுக்கு நறுமணம் வீசும் வஸ்துகளைப் பூசி, உயர்தர ஆடைகளை அணிவித்து அழைத்துச் செல்கிறார்கள். அவரை அழைத்துச் செல்லவந்த தேவதூதரோ, “அய்யா. பிரம்மச்சரிய விரதம் இருந்த தாங்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் உலகில் அனுபவிக்க முடியாத சந்தோஷங்களை அங்கே நிரந்தரமாக அனுபவிப்பீர்கள்” என்றார்.

பிரம்மச்சாரிக்கு மெத்த மகிழ்ச்சி. தன்னுடைய கடுமையான விரதத்துக்கு கிடைத்த பலனை எண்ணி மகிழ்ந்தவாறே ரதத்தில் விரைகிறார். வழியில் நிறைய பேரை பார்க்கிறார். சாதாரண ரதங்களில் சில பேரும், மாட்டு வண்டிகளில் ஆடுகள் போல அடைக்கப்பட்டு பல நூறு பேரும், பெரும் பாரங்களை சுமந்து கூன் விழுந்த முதுகோடு நடந்து செல்லும் லட்சக்கணக்கான பேரையும் பார்க்கிறார்.

ஒரு மாட்டு வண்டியில் கூட்டத்தோடு கூட்டமாக தன் குருவும் அடைத்துச் செல்லப்பட்டிருப்பதை கண்ட பிரம்மச்சாரிக்கு கடுமையான அதிர்ச்சி.

“என்ன கொடுமை குரு சார் இது? இப்படி ஏமாத்திட்டீங்களே?”

“அடப்போய்யா. நமக்கு முன்னாடி பாரத்தை தூக்கிக்கிட்டு கல்லிலும், முள்ளிலும், நெருப்பிலும் நடந்து போறது யாருன்னு தெரியுதா?”

“தெரியலையே குருவே!”

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு இலக்கணமா உலகத்துலே நாம சொல்லிக்கிட்டிருந்த அயோத்தி இராமபிரான் தான். வேற யாரு?”

20 comments:

தமிழச்சி said...

///ஒரு ”கட்டை” பிரம்மச்சாரி ஒருவர் பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார்///

தோழர் லக்கி இந்த வாக்கியத்தில் ஒரு பிழை இருக்கின்றது. உடனடியாக திருத்தம் செய்யவும்

லக்கிலுக் said...

//தோழர் லக்கி இந்த வாக்கியத்தில் ஒரு பிழை இருக்கின்றது. உடனடியாக திருத்தம் செய்யவும்//

திருத்திவிட்டேன் தோழர். நாளுக்கு நாள் தங்களுடைய தமிழறிவு பிரம்மாண்டமாக விரிந்துக் கொண்டே போகிறது.

TBCD said...

பொந்து மததிலே சொல்லூறது எல்லாம் புருடான்னு இப்பவாச்சும் புரிஞ்சதா.. :P

TBCD said...

விட்டுப் போச்சு..புரிஞ்சதா அந்தக் கட்டைப் பிரம்மச்சாரிக்கு..

முரளி கண்ணன் said...

I expect some kummy here

வால்பையன் said...

என்ன தான் சொல்ல வர்ரிங்க தலைவா
ஒண்ணுமே புரியல டவுசர் கிழியுது
பொண்டாட்டி கட்டலாமா, வேண்டாமா ?
இல்ல சின்ன வீடு வச்சுக்கலாமா!
இந்த கதையின் நீதி என்ன?

வால்பையன்

கருப்பன்/Karuppan said...

//
I expect some kummy here
//
அடிச்சுட்டா போச்சு ;-)

//
“ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு இலக்கணமா உலகத்துலே நாம சொல்லிக்கிட்டிருந்த அயோத்தி இராமபிரான் தான். வேற யாரு?”
//
அவரு இளமை காலத்தையெல்லாம் காட்டுக்குள்ள கழிச்சதாவுல கேள்விப்பட்டேன், பின்னே எப்படி??? ஹூம்... ரூம் போட்டுதான் யோசிக்கனும் போல! :-0

மிதக்கும்வெளி said...

((((((((((((((((((((((((((((-

Anonymous said...

Can you dare to post similar post about Mohamad. Why you want to hurt other's feelings. Definitely hinduism has its failings like caste system etc. But for those failings being critical for everything hinduism stands for is wrong.

Anonymous said...

Dear Anony,
Thanks for your concern on our great sanatha dharm.

Please answer my question.
Are you a Hindu? If yes? Are you wearing a sacred thread on your chest or colorful (red or black) thread on your wrist?

Wearing a thread, its type, colour and its placing - everything is clearly defined by our great dharma. சல்லிக்கு பொறாத நூல் அணிவதிலிருந்து - சாமி இருக்கும் இடத்தில் ‘கால்' வைப்பது வரை நமது முன்னோர்கள் வரையறுத்து விட்டார்களாம்..தெரியாதா உனக்கு?

Which part of the 'brahma' you and your forefathers come from? தலையிலிருந்தா? நெஞ்சிலிருந்தா? காலிலிருந்தா அல்லது அதற்கும் கீழிலிருந்தா?
Dont you feel shame to call yourself as Hindu, whne the hindu religioous authiroty (living as well as dead)
itself does not recognise you as 'full' Hindu. பார்ப்பான்தான் முழு இந்து மற்றவன் எல்லம் ‘கால்' ‘அரைக்கால்' ‘முக்கால்' இந்துதான்..understand..

Do you know the fact that you are given the 'Hindu' label only during the 'communal violence'.
when we fight with other caste people - the dailies controlled by them always report that clash between 'Dalits and caste Hindus'.

முஸ்லிம்களிடமும் - கிரித்துவர்களிடமும் சண்டை போடும்போது மட்டும்தான் நமக்கு - தற்காலிகமாக ‘ஹிந்து' லேபில் ஒட்டுவார்கள்..அதற்கு பிறகு 'அம்பேல்'

Rama is the symbol of 'higher caste hindus' (not even the symbol of 'OBC Hindus') - therefore, take the message
from this post and do not divert the topic. சிண்டு முடியாதே! First let us correct our 'home' - before we advise others.


எவ்வளவு தெனாவெட்டாக
'Definitely hinduism has its failings like caste system etc.' சொல்கிறாய்?

You should understand, Hinduism is critized only for those fundamental failings.


தமிழில் தேவரம் பாடினால் - தீட்டுக்கழிக்க சொல்கிறதே- ஹிந்து மதம் அவ்வாறு செய்ய சொல்லியிருக்கிறதா இல்லையா என்று நீ சொல்? அதை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்..புரியுதா?

இஷ்டமிருந்தால் இங்கே வந்து கும்மியடி - இல்லையென்றால் தனியாக எங்காவது உட்கார்ந்து ‘கரசேவை' செய்..

அன்புடன்,
ஆங்கில-Tamil அnoனி

புரட்சி தமிழன் said...

//தமிழில் தேவரம் பாடினால் - தீட்டுக்கழிக்க சொல்கிறதே- ஹிந்து மதம் அவ்வாறு செய்ய சொல்லியிருக்கிறதா இல்லையா என்று நீ சொல்? அதை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்..புரியுதா?

இஷ்டமிருந்தால் இங்கே வந்து கும்மியடி - இல்லையென்றால் தனியாக எங்காவது உட்கார்ந்து ‘கரசேவை' செய்..

//
சரியாகச் சொன்னீர்கள் அணானி வாழ்த்துக்கள்

SanJai said...

இதை படிக்கும் போது எனக்கு குசும்பனை தவிர வேறு யார் நினைவும் வரவில்லை :P

தருமி said...

ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது அவனுக்கு அங்கிங்கு சுவனத்தில் சுற்றிப் பார்க்க ரொம்பவும் விலை உயர்ந்த கார் ஒன்று கொடுக்கப் படும்... என்ற ஒரு கதை எனக்குத் தெரியுமே! உங்களுக்கு ...??

Anonymous said...

I do not have thread in my chest or hand. You are missing my point. I agree casteism is a BIG mistake of hindu reliegion. But what do you gain my hurting other's feelings. Give respect for other's sentiments. Ultimate goal of any human being is peacefull coexistance with other humans.

Anonymous said...

/Anonymous said...

Can you dare to post similar post about Mohamad. Why you want to hurt other's feelings. Definitely hinduism has its failings like caste system etc. But for those failings being critical for everything hinduism stands for is wrong./

ஏங்க இதில முஹம்மதை இழுக்குறீங்க? உங்களுக்குள் உள்ள பிரச்னையை நீங்க பேசி தீர்த்துக்கங்க. இதில மத்தவங்க நம்பிக்கையை புண்படுத்தாதிங்க என்கின்ற அறிவுரை வேற. முதல்ல உங்களை திருத்திட்டு வாங்க. புரியுதா?

Anonymous said...

Give respect for other's sentiments. Ultimate goal of any human being is peacefull coexistance with other humans.
-Anony

How do you expect the religion and God, which founded on the basis of casteism (varnashram) would contribute for the peaceful coexistence?

அன்புடன்,
ஆங்கில-Tamil அnoனி

Anonymous said...

//தமிழில் தேவரம் பாடினால் - தீட்டுக்கழிக்க சொல்கிறதே- ஹிந்து மதம் //

தேவாரம் ஒன்றும் தெலுங்கிலோ கன்னடத்திலோ எழுத படவில்லை...
அடுத்தவருக்கு முறை விட்டு கொடுக்காமல், திரும்ப திரும்ப பாடினால் என்ன சொல்வதாம்..?

செய்தி தாள்களில் திரிக்கப்பட்ட செய்தி இது.. :(

Anonymous said...

அழகு :-)

Anonymous said...

லக்கி, எங்கய்யா புடிக்கற இந்த மாதிரி நவீன ஓவியத்தையெல்லாம்?. கலக்குது. ஆனா பதிவோட கருத்து புரியலயே. எப்படியோ கட்டை பிரம்மச்சாரி ஒரு நல்ல (செம) "கட்டை" ய பாக்கற வரைக்கும் ப்ரம்மச்சரியத்த கடைபுடிப்பான்.

Anonymous said...

hi luky h r u