உடன்பிறப்பே!
உயிர் மண்ணுக்கு -
இந்த ஈன உடல்
நமீதாவுக்கு!!
* - * - * - * - * - * -
சினிமா மூன்றெழுத்து
சினிமா பார்க்க தேவையான
துட்டு - மூன்று எழுத்து
படம் பார்க்க வைக்கும்
நமீதா - மூன்று எழுத்து
நமீதா மீது நமக்கு வரும்
காதல் - மூன்று எழுத்து
காதலால் விளையும்
மோகம் - மூன்றெழுத்து
மோகம் பாடவைக்கும்
கவிதை - மூன்றெழுத்து
இங்கே நமீதாயணம் பாடும்
லக்கி - மூன்று எழுத்து!
* - * - * - * - * - * -
தமிழர்களே! தமிழர்களே!
என்னை தூக்கி நீங்கள் கடலிலே போட்டாலும் நமீதா போடும் பிகினியாக மாறி மிதந்துவருவேன். மாய மந்திர ஜாலத்தால் என்னை கழுதையாக நீங்கள் மாற்றினாலும் நமீதா பட போஸ்டரை தின்று உயிர்வாழ்வேன்.
* - * - * - * - * - * -
அசின், த்ரிஷா, ஸ்னேஹா, நயன்தாரா என்றெல்லாம் உச்சரித்தால் உதடுகள் கூட ஒட்டாது. “நமீதா” என்று சொன்னால் தான் உங்கள் உதடுகள் கூட ஒட்டும்.
* - * - * - * - * - * -
எழுச்சியுகம் காண சிறுத்தை போல சீறும் சிங்கங்காள்!
நமீதாவைப் பார்க்க தியேட்டருக்கும் ஓடும் உமது இரண்டு கால்!!
நயன்தாரா, அசின் என்று நாபாடும் தருக்கர் கொட்டம்!
நமீதா பேரை சொன்னால் தான் இனிமேல் கூடும் கூட்டம்!!
ஈட்டி முனைகளும், தீட்டிய கூர்வாட்களும் துருப்பிடித்து போகும்!
நாகரீக நங்கை நமீதாவின் வேல்விழிகளின் முன் தாவூ தீரும்!!
* - * - * - * - * - * -
தலைவர் கலைஞர் மன்னிக்க! :-(
இப்பதிவை மீண்டும் ஒரு முறை தலைவர் கலைஞரின் வாய்ஸில் படித்துப் பார்த்தீர்களேயானால் ஸ்பெஷல் எஃபெக்டு இருக்கும்!
நமீதாயணத்தை பார்த்து யாருக்காவது கொலைவெறி ஏற்பட்டிருக்குமானால், அவர்களுக்கு நிவாரணமாக ஒரு நயன் படம் கீழே இலவச இணைப்பாக வழங்கப்படுகிறது!
நமீதாயணம்!
Subscribe to:
Post Comments (Atom)


-க்ளிக்கி வாசிக்கவும்!
15 comments:
கருத்துள்ள பதிவு லக்கி!
- இப்படிக்கு அபிஅப்பா
"தம்பிய்... அண்ணன் இன்னைக்கு செக்ஸ் மூடுல இருக்காரு அதுனால தப்பிச்சீங்க" --கைப்புள்ள
//
அவர்களுக்கு நிவாரணமாக ஒரு நயன் படம் கீழே இலவச இணைப்பாக வழங்கப்படுகிறது!
//
நான் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனு நினைச்சு அவசரமா கீழே உள்ள படத்தை பார்த்தா... புஸ்ஸ்ஸ்...
அண்ணே எனக்குப் போட்டியாநீங்களுமா?
நயன்தாரா படம் அருமை. நிவாரணப் படம் போட்டதுக்கு பதிலாக நிர்வாணப் படம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
//தமிழர்களே! தமிழர்களே!
என்னை தூக்கி நீங்கள் கடலிலே போட்டாலும் நமீதா போடும் பிகினியாக மாறி மிதந்துவருவேன். மாய மந்திர ஜாலத்தால் என்னை கழுதையாக நீங்கள் மாற்றினாலும் நமீதா பட போஸ்டரை தின்று உயிர்வாழ்வேன்.//
லக்கி,
:-((((((((
வன்மையாக கண்டிக்கிறேன்
//லக்கி,
:-((((((((
வன்மையாக கண்டிக்கிறேன்//
அழகிய ராவணன்!
நீங்கள் கண்டிப்பாக இருந்தால் அந்த ஒரு பத்திக்காக மட்டுமல்ல இந்த பதிவு முழுமையினையுமே கண்டிக்க வேண்டியிருக்கும். பதிவு முழுக்க முழுக்க கலைஞர் பாணி தான்!!!
சுய எள்ளல் என்பது திராவிட கலாச்சார இலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உணர்வு என்ற முறையில் இப்பதிவு தவறில்லை என்று நினைக்கிறேன்.
நன்றி!
நமிதா சினிமா படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது , "இடை" கால நிவாரண நிதிக்கு நன்றி.
"யோனிப்பதிவுகள் தொடரும் ஒரு அழுகாச்சிக் காவியம்" என்கிற தலைப்பே கடுமையான கண்டனத்திற்குறியது. தமிழச்சியினுடைய அந்த பதிவுகளை அழுகாச்சிக் காவியமாக நீங்கள் குறிப்பிடுவதைப் பார்த்தால் உங்களின் மனிதாபிமான அளவுகோல் ரொம்பவே கீழிறங்கி நிற்கிறது. "முக்கோணத்தை அழுத்தி, அழுத்தி தாவூ தீர்ந்து விட்டது. டவுசர் சுக்குநூறாக கிழிந்துவிட்டது" என்னய்யா இதெல்லாம்? அசிங்கமா இல்லை?
அதேபோல் கலைஞர் நடையில் நமீதாயணம் எழுதியதும் உன் கையைக், காலை உடைக்க வேண்டிய ஒன்று. இந்த வயதில் அந்த மனுஷன் வேப்ப மரத்தில் பால் வடிவது பற்றி எழுதுகையில், அவரின் அடிப்பொடி என்று கூறிக் கொள்ளும் நீ அவரையே கிண்டலடிக்கிறாய். உன்னை வேறொரு சந்தர்ப்பத்தில் வச்சுக்கிறேன்(இதுக்கும் டபுள் மீனிங் கண்டுபிடிச்சுடாத).
சிரிக்க வைத்தது! இந்த வரிகளை
//நமீதா பேரை சொன்னால் தான் இனிமேல் கூடும் கூட்டம்!!//
இப்படி எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?:
நமீதா பேரை சொன்னால் தான் அதிருமே கூட்டம்!!
பி.கு.: இப்படியே கலைஞரை கிண்டல் பண்ணியாவது அவருடைய கவனத்தை ஈர்க்கவேண்டுமென்ற உங்கள் ஆவல் தெரிகிறது!
ஆழ்ந்த கருத்து, அருமையான வார்த்தைகள், தீர்ந்தது என் சந்தேகம்,, நக்கீரா..
//நமீதாயணத்தை பார்த்து யாருக்காவது கொலைவெறி ஏற்பட்டிருக்குமானால், அவர்களுக்கு நிவாரணமாக ஒரு நயன் படம் கீழே இலவச இணைப்பாக வழங்கப்படுகிறது!//
நிர்வாணம் என்று மாத்தி படிச்சு தொலைச்சுட்டேன்யா.
உடன்பிறப்பே, கலைஞர் டி.வி மட்டும் பார்க்கிறாய், முரசொலி
படிக்கமாட்டாயா. மார்பாடா
மானாட பார்க்கும் நீ கலைஞர்
எழுதும் கேள்வி பதிலை, கடிதத்தினை
படிக்கமாட்டாயா. உன்னையெல்லாம்
முரசொலி படிக்க் வைக்க நமீதாவும் முரசொலி படிக்க வேண்டுமா.
நமீதாயணம் போதும், முரசொலி
படி, விடுதலை படி.
பலான நமீதாக்கள் இருந்தென்ன லாபம்?
பலபேரின் வாழ்க்கை திசைமாறிப் போகும்!
எழுத்து மிகசிறந்த ஆயுதம். சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பரே.
சிவன்
சிரிச்சு பார்க்க வேண்டிய பதிவ போய்.. சீரியஸா சிந்திச்சு பாக்குறாங்களே சில பேரு.. பாவம்ய்யா!!
இரண்டு நமீதா படம் பார்ப்பதுதான் இதுக்கு மருந்து! என்ன நான் சொல்லுறது!:)))
Post a Comment