”மறந்துபோவது குறித்த சில நினைவுக்குறிப்புகள்" - மொழிப்பெயர்ப்பு!!


மொழிப்பெயர்த்தல் சுலபமல்ல. ஆங்கிலத்தை தமிழாக்குவதும், பிரெஞ்சினை தமிழாக்குவதும், ஏன் ஹீப்ருவை தமிழில் மொழிபெயர்ப்பதும் கூட இன்றைய உலகமயமாகிப்போன நிலையில் நமக்கு பிரச்சினை அல்ல. பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், ஜமாலன், சுகுணாதிவாகர், அய்யனார் மற்றும் மோகன்தாஸ் வகையறாக்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பது தான் இன்றைய தமிழ்சூழலில் சவாலான காரியமாக படுகிறது.

மூலத்தை அப்படியே மொழிபெயர்த்தல் ஒரு எழுத்தாளன் செய்யக்கூடியதல்ல. மூலத்தை முழுவதுமாக உள்வாங்கி அப்படியே தன் மொழிநடையில் மாற்றுபவன் தான் எழுத்தாளன் என்று சுஜாதாவோ, ரா.கி.ரங்கராஜனோ.. பட்டாம்பூச்சி புத்தக முன்னுரையிலோ அல்லது வேறு எங்கேயாவது சொல்லித் தொலைத்திருக்கிறார்கள்.

அந்த அரிய மொழிப்பெயர்ப்பு பணிகளை அவ்வப்போதாவது செய்துவிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் நமக்கு இச்சூழலில் கொஞ்சமாவது இருக்கிறது. பின்நவீனத்துவ பிச்சுவா பக்கிரி சுகுணாதிவாகர் சமீபத்தில் எழுதிய பதிவொன்றும், அதில் இடம்பெற்ற கவிதையும் எந்த மொழி என்று புரியாமல் கோவணத்தை உருவிக்கொண்டு ஓடியவர்கள் ஏராளம். அந்தப் பதிவு முழுவதையும் என்னால் தமிழ்ப்படுத்த இயலவில்லை என்றாலும், கவிதையை மட்டுமாவது தமிழ்ப்படுத்த முயற்சிக்கிறேன்.

மொழிபெயர்க்கப்பட்ட கீழ்க்கண்ட கவிதையை புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

1) பெல்ட் போட்ட டவுசர்
2) டவுசருக்குள் பாதுகாப்புக்கு ஒரு கோவணம்




கூட சரக்கடிச்ச
நாதாரிப்பய
நவுந்து போறான்..
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?

லுங்கிய ஏத்திக்கினு
லோடு ஏத்த
மார்க்கெட்டுக்கு போனா..
அதே நாதாரி!
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?

காஜா பீடி
வலிச்சிக்கினு
மாநகராட்சி கக்கூஸ்லே
புத்தன் மாதிரி
உட்கார்ந்தப்போ தான்
டகால்னு
ஞாவகம் வருது
அவன் பேரு
டமார் குமாரு!!

8 comments:

மறந்து போனவன் said...

முதல் தடவையா தமிழில் எழுதினதை தமிழில் மொழிபெயர்த்ததை இப்போது தான் பார்க்குறேன். ஏன்யா சுகுணாவும் தமிழில் தானே எழுதியிருக்காரு? எதுக்குய்யா இப்படி மொக்கை போடறீங்க?

Anonymous said...

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா

அடங்குங்கடா. ஆடாதீங்கடா.

சுகுணாதிவாகர் said...

டமார்குமாரும் தாவோயிசமும் என்னும் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் எதிர்பாருங்கள்! (dedicated to 'damar' krishnakumar)

Anonymous said...

nalla molipeyarppu. thodaravum.

தமிழச்சி said...

Tuesday, 25 March, 2008
தமிழ்மணத்தில் இருந்து பதிவை மட்டும் நீக்கியிருப்பதாக சொல்லும் உங்கள் மின்னஞ்சல் என்னை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதை ஏன் குறிப்பிடவில்லை?
தமிழ்மணத்தின் நிர்வாகத்தினரிடமிருந்து வந்த மின்னஞ்சலில்

தமிழ்மணத்தில் இருந்து இந்த பதிவு (குறிப்பிட்ட) நீக்கப்படுகின்றது

என்று சொல்லிவிட்டு தமிழ்மணத்தில் இருந்து என்னை விலக்கி

வைத்திருக்கிறீர்கள். இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன?

நீங்கள் நீக்கியது பதிவையா? என்னையும் சேர்த்தா? என்னை

நீக்குவதென்றால் 24 மணிநேரத்திற்கு முன் உங்களுடைய

அறிவிப்பு எனக்கு வந்திருக்க வேண்டும். அப்படி எந்த

மின்னஞ்சலும் தமிழ்மணத்தின் நிர்வாக்கதினரிடமிருந்து

எனக்கு வரவில்லை. காரணங்களை எனக்கு தெரிவிக்க

வேண்டுகின்றேன்.

தமிழச்சி said...

Tuesday, 25 March, 2008
இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

to me show details 6:46 AM (6 hours ago) Reply
Content-type: text/html; charset=utf-8
From: http://www.thamizmanam.com/ postadmin@thamizmanam.com Cc: postadmin@thamizmanam.com
Dear author,
Your post தமிழச்சியின்is removed by http://www.thamizmanam.com/ Administrator due to follwing reason,



http://www.www.thamizmanam.com/

Dear ,Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.

க. இரமணிதரன்

தமிழ்மணம்,

நிர்வாகி http://www.www.thamizmanam.com/. ////

க. இரமணிதரன் அவர்களுக்கு,

நீங்கள் தமிழ்மணத்தின் நிர்வாகிகளுள் ஒருவராக இருப்பது பிரச்சனை அல்ல. பெயரிலி என்ற பெயரில் நீங்கள் பதிவர்களை குறிப்பாக என்னை மிக கேவலமான முறையில் தரக்குறைவாக பேசியதற்கு தமிழ்மணத்தை சேர்ந்த மற்ற நிர்வாகிகளான MR. சுந்தரவடிவேலு, MR. சுடலைமாடன், MR. கார்த்திக்ராமாஸ், MR. தமிழ் சசி அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். நீங்கள் என்னைத் தாக்கி பேசிய வார்த்தைகளைத் தான் அப்படியே பதிவாக எடுத்து போட்டேனே தவிர அதில் என்னுடைய எழுத்துக்கள் எதுவும் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக என்னால் நிருபிக்க முடியும். அப்படி இருக்கும் போது உங்களுடைய எழுத்தை எடுத்துப் போட்டதே ஆபாசமென்றால் உங்களை எதனால் அடித்தால் தகும். காபரே டான்ஸ் ஆட்டக்காரி என்று வர்ணிப்பீர். அதை கேட்டுக் கொண்டு ஒதுங்கி போக வேண்டுமா? இந்த மாதிரி ரவுடி வேலையெல்லாம் என்னிடம் காட்டினால் மரியாதை இருக்காது. இன்று காலையில் லக்கியின் பதிவை நீக்கினீர்கள். அதில் உங்களை தாக்கி எழுதியிருப்பதாக சொல்கிறீர்கள். என்னுடைய பதிவில் உம்முடைய எழுத்தை தானே பதிவு செய்திருந்தேன். மற்ற தமிழ்மண நிர்வாகிகள் கவனித்துப் பார்க்க வேண்டும். இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? குறிப்பாக தந்தை பெரியாரின் பதிவுகள் உள்பட?

பொய்யன் said...

ennudaya pathivu ondrum neekkappattirukkirathu. france athibar manivin photo onnu potten. thappa. ulaga pathirigaikal athai pottirukirathu. antha pathivil chella, lucky, tamilachi peyar kurippitturnthen. athuthan karanamaga irukkumo? puthu pathivargal paathikkappattalum konjam koral kudungappa

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை ஒரு நல்ல எதிர்-கவிதை (counter poetry).

முதலில் படித்த போதே சொல்ல நினைத்து மறந்து போனேன் :)