தினகரன் இமாலயச் சாதனை தொடர்கிறது!

சென்ற ஆண்டு இதே மாதம் நம் வலைப்பூவில் தினகரனின் சாதனை குறித்த பதிவு வந்தபோது எழுந்த புகைச்சல் நன்கு நினைவிருக்கிறது.

- ஒரு ரூபாய்க்கு விற்றார்கள், ரெண்டு ரூபாய் ஆக்கினால் விற்பனை படுத்துவிடும்.

- ஆளுங்கட்சியின் அனுக்கிரஹம்

- NRS, IRSலே தானே வருது, ABCயில் வருதா பார்க்கலாம்

என்றெல்லாம் நொட்டை காரணங்களை பலரும் சொல்லிவந்தபோது தினகரனின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், லே-அவுட், எளிமையான மொழிநடை, அச்சுநேர்த்தியோடு கூடிய வண்ணப்படங்கள் போன்றவற்றால் நெ.1 அந்தஸ்தில் இருக்க தகுதியான நாளிதழ் தினகரன் என்று பலமுறை சொல்லிவந்திருக்கிறேன்.


என்னுடைய நம்பிக்கையை மூன்றாவது அரையாண்டாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது தினகரன். 2006ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான கணக்கீட்டில் தினகரன் நாளிதழ் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் நாளிதழ் என்ற சாதனையை படைத்திருந்தது. அப்போது தான் 1 ரூபாய்க்கு விற்பதால் தான் அதிகம் விற்கிறது என்ற விமர்சனத்தை விமர்சகர்கள் வைத்திருந்தார்கள்.

அடுத்த அரையாண்டில் தினகரன் 2 ரூபாயாக விலையேற்றப்பட்ட போதும் கூட அதே முதலிடத்தை தினகரன் தக்கவைத்துக் கொண்டபோது ஆளுங்கட்சிக்கு அனுசரனையான நாளிதழ் என்பதால் முதலிடத்தில் நிற்கிறது என்றார்கள்.


இப்போது மூன்றாவது முறையாக விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு மரண அடி கொடுத்து (ஆளுங்கட்சிக்கு இன்று ஆகாத பத்திரிகை) தனது முதலிடத்தை தக்கவைத்து இமாலயச்சாதனை புரிந்திருக்கிறது தினகரன். ஒரே ஆண்டில் சுமார் எழுபது ஆயிரம் பிரதிகள் அதிகமாகவும் விற்கிறது என்பதனை 2007ஆம் ஆண்டுக்கான பிற்பகுதி ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷனின் தணிக்கை தெள்ளத்தெளிவாக தெரிவிக்கிறது.

2006ஆம் ஆண்டு இறுதியில் தினகரனின் விற்பனை 9 லட்சத்து 657 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 9 லட்சத்து 72 ஆயிரத்து 934 பிரதிகளாக உயர்ந்திருக்கிறது. பத்து லட்சம் என்ற இலக்கினை அடையும் முதல் தமிழ் நாளிதழாக உருமாற இன்னமும் பதினெட்டாயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனையில் அதிகரிக்க வேண்டும் என்ற எளியநிலை நிலவுகிறது. இந்த முதல் அரையாண்டில் அந்த சாதனையையும் தினகரன் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.

தினகரனைப் போலவே ஆங்கில நாளிதழான டெக்கான் க்ரானிக்கிளும் இந்த ஆண்டு சாதனை படைத்திருக்கிறது. இதுவரை தென்னிந்தியாவில் அசைக்க முடியாத நாளிதழாக இருந்த தி ஹிந்துவை பின்னுக்கு தள்ளி பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது டெக்கான் க்ரானிக்கிள்.

5 பின்னூட்டங்கள்:

முரளி கண்ணன் said...

bar chart not really reflect the true value (it is also an advt. trick?)

புள்ளிவிவரம் said...

முரசொலி சர்க்குலேஷன் எவ்வளவு இருக்கும்?

லக்கிலுக் said...

//முரசொலி சர்க்குலேஷன் எவ்வளவு இருக்கும்?//

நமது எம்.ஜி.ஆரை விட நாலு மடங்கும், துக்ளக்கை விட எட்டு மடங்கும் அதிகம் :-)

ரவிஷா said...

நீங்க நல்லவரா கெட்டவரா? I mean மாறன் "சன்" கட்சியா இல்ல சன் ஆஃப் "Sun" கட்சியா?

வீ. எம் said...

உங்கள் கணிப்பு சரியே, இன்றளவில் மோதல் இருந்தாலும் தி மு க வின் அனுதாபிகள் பலர் தினகரன் வாங்குகிறார்கள் (முரசொலி தவிர்த்து) . நாளையே கலைஞர் டீ வி போல், தி மு க ஒரு நாளிதழை கொண்டுவந்தாலோ, அல்ல இருக்கின்ற தினசரிகளுள் ஏதேனும் ஒன்றை தங்கள் சார்பாக திருப்பிவிட்டாலோ, தி மு க அனுதாபிகள் பலர் தினகரனை விட்டு அந்த புதிய நாளிதழுக்கு நிச்சயம் வருவர்... அப்போது தினகரனுக்கு பாதிப்பு ஏற்படலாம்,... தொடும் தூரத்தில் இருக்கும் தினத்தந்தி முந்தி வரலாம்