சிலநாட்களாக தமிழ் வலையுலகம் சர்ச்சைகளில் சிக்கி அவதிப்பட்டு வருகிறது. ஆபரேஷன் அல்மா சயூப் தொடங்கி வைத்த இந்த சச்சரவுகள் ஜிகாதி என்றெல்லாம் திசைமாறி கடைசியில் பலிகடாவாக தமிழ்மணம் திரட்டி மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்மணத்தால் ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட விரும்பும் சில மத, சாதி வெறியர்கள் எவ்வித ஆதாரமும், அடிப்படை தார்மீக நெறியும் இன்றி தமிழ்மணத்தின் மீது தொடர்ந்து அவதூறு கற்பித்து வருகிறார்கள். எண்ணற்ற திரட்டிகள் இருக்க, குறிப்பாக தமிழ்மணமும் அதன் போட்டி திரட்டியுமான தேன்கூடுமே தமிழ்வலைப்பதிவுகளை திரட்டுவதில் முன்னணியில் நிற்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் ஆபரேஷன் சல்மா அயூப்பில் ஈடுபட்ட அமுகவினருக்கு தமிழ்மணம் தான் ஐ.பி. எண்களை அளித்தது என்ற குற்றச்சாட்டு மிகுந்த நகைப்புக்குறியது. ஏன் தேன்கூடு கொடுத்திருக்காது என்று எப்படி நம்புகிறார்கள்...? அந்த பெண் பதிவரின் போலி பக்கத்தினை தேன்கூடில் பார்த்ததாக ஒருவர் சொல்லி இருக்கிறாரே?
ஒருவித உள்நோக்கத்தோடும், சல்மாவை காப்பாற்றும் எண்ணத்தோடும் அவர்கள் செயல்படுவார்கள் என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட தமிழ்மணம் திரட்டியின் மீது அவதூறுகளை வீசவேண்டியதின் அவசியம் என்ன என்பது தான் புரியவில்லை.
திறமையான Counter வைத்திருப்பவர்களால் மிகச்சுலபமாக ஐ.பி. எண்ணை கண்டுபிடிக்க இயலும் அல்லவா? இதைக்கூட சாதிவெறி மடையர்களால் யோசிக்க இயலாதா?
தமிழ்மணம் நிர்வாகம் பயனாளிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யாது என்று விளக்கம் அளித்தப்பிறகும், அதன் சட்ட திட்டங்களை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டியும் கூட தொடரந்து தமிழ்மணம் மீது இவர்கள் சேறு பூசவேண்டிய அவசியம் தான் என்ன?
இந்த மத, சாதி வெறியர்களின் மடத்தனத்தை கண்டித்து கீழ்க்கண்ட பேட்ஜ் ஒன்றினை என் வலைப்பூவின் முகப்பில் அணிய இருக்கிறேன். சாதி, மதவெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைக்கும் பதிவர்களும் தயவுசெய்து தங்கள் டெம்ப்ளேட்டில் இந்த பேட்ஜை அணியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பேட்ஜை உங்கள் அடைப்பலகையில் அணிய நண்பர் பாலபாரதி ஒரு Widget உருவாக்கியிருக்கிறார். இங்கே அமுக்கி பயன்பெறவும்.
கருப்பு, சிவப்பு நிறம் நிறைய பதிவர்களுக்கு பிரச்சினை தருவதாக பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்காக பச்சைநிற பேட்ஜ் ஒன்று இதோ :



-க்ளிக்கி வாசிக்கவும்!
44 comments:
நல்ல முடிவு. இந்த பேட்ஜினை Widget ஆக செய்து கொடுத்தால் பதிவர்கள் உபயோகப்படுத்த சுலபமாக இருக்குமே?
தமிழ்மணம் இன்னுமே தமிழ்நாற்றம்ன்னு பெயர் மாற்றம் செய்து கொள்ளவும் பரிந்துரைக்கவும்.
ஒருவித உள்நோக்கத்தோடும், சல்மாவை காப்பாற்றும் எண்ணத்தோடும் அவர்கள் செயல்படுவார்
//
சல்மா சல்மா என்று சொல்வதற்கு பதில் செயராமன் என்று சொல்வதற்க்கு என்ன ..????
நீங்களும் அவருக்கு காவடி தூக்குவது போல் இருக்கிறது...
why DMK background color?
//நல்ல முடிவு. இந்த பேட்ஜினை Widget ஆக செய்து கொடுத்தால் பதிவர்கள் உபயோகப்படுத்த சுலபமாக இருக்குமே? //
நான் சொல்ல நினைத்ததை அனானியே சொல்லிவிட்டார். பதிவர் சந்திப்புக்கு செய்தது போல் செய்தால் இணைப்பு கொடுக்க வசதியாக இருக்கும்.
அவனவன் பாஸ்வர்டே கண்டுபிடிக்கிறான். தமிழ்மணம் மீது செய்யும் தாக்குதல்கள் தேவயற்றது.
இதை வழிமொழிகிறேன்....
http://varththaham.blogspot.com
//why DMK background color?//
நல்லா பாருய்யா வெண்ணை. அது தி.க. கலரு!
//தமிழ்மணம் இன்னுமே தமிழ்நாற்றம்ன்னு பெயர் மாற்றம் செய்து கொள்ளவும் பரிந்துரைக்கவும்.//
நாற்றம் என்றாலும் நல்வாசனை, நல்ல மணம் என்றே பொருள். எனவே உங்கள் பரிந்துரை ஏற்கத்தக்கது.
துர்நாற்றம் என்றால் மட்டுமே நீங்கள் விரும்பும் அர்த்தம் கிடைக்கும். எனினும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் இடத்தில் துர்நாற்றம் தானே இருக்க முடியும்?
அனானி நண்பர் ஒருவர் தான் சங்கராச்சாரியாருக்கு விளக்கு பிடித்ததாகவும், விளக்கு பிடித்ததை எல்லாம் ஐ.பி. கொண்டு கண்டுபிடிக்க முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். அவருடைய பின்னூட்டம் அநாகரீகமாக இருப்பதாலும் அவர் விளக்கு பிடிப்பது என்பது அவரது சொந்த அலுவலை ஒட்டியிருப்பதாலும் அவரது பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது :)
நான் கேள்விப்பட்டது உண்மைதானா?
/ஆபரேஷன் அல்மா சயூப் /
சல்மா அயூப்? 7- அப் கேவா?
இப்படியா என்பதை இங்கே பார்த்து சொல்லவும்.
http://livingsmile.blogspot.com/
நன்றி!!
நன்றி லிவிங் ஸ்மைல்!!!!
நண்பர்களே!
Widget தயாராக இருப்பதாக ஒரு பதிவர் தொலைபேசியில் சொன்னார். விரைவில் அவரது வலைப்பூவில் Widget தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
//மிதக்கும் வெளி said...
நான் கேள்விப்பட்டது உண்மைதானா?//
எது?
http://eenpaarvaiyil.blogspot.com
போட்டாச்சுங்க ஆபிசர்
பட்டை போட்டாச்சு லக்கியாரே!
பேட்ஜின் கலர் குறித்து தோழி ஒருவர் தனிமடல் அனுப்பியிருக்கிறார்.
அத்தோழிக்கு!
இது அதிமுக கலரும் கிடையாது, திமுக கலரும் கிடையாது.
கருப்பு - ஜாதி மத வெறியர்களுக்கு நாம் தெரிவிக்கும் எதிர்ப்பு
சிவப்பு - புரட்சி!!!
வெள்ளை - கருப்பு, சிவப்பில் எழுத்து தெரியணுமே? :)))))
தொடர்ந்து தங்கள் பதிவுகளை படித்துக்கொண்டிருந்தாலும் அதிகம் பின்னூட்டியதில்லை.
மனிதநேயம் மறந்து மதவெறியில் குரூர இன்பம் காணும் இணையக் கயவர்களுக்கு எதிராக உங்களுடன் சேர்ந்து என்னுடைய ஓட்டையும் பதிவு செய்திருக்கிறேன், இங்கே!
பட்டை போட்டாச்சு லக்கியாரே!
மீ டூ
தலைவா பட்டைய போட்டாச்சு.
என்னுடையதில் நானும் சேர்த்து விட்டேன்.
தமிழ் மணத்திற்கு எனது ஆதரவையும் ஜாதி மத வெறியர்கலுக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.
பட்டை போட்டாச்சு lucky
நான் கிளிக்கினா வரமாட்டுங்குது லக்கி :-(
போட்டாச்சு ... போட்டாச்சு .. !
/தமிழ்மணத்தால் ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட விரும்பும் சில மத, சாதி வெறியர்கள் எவ்வித ஆதாரமும், அடிப்படை தார்மீக நெறியும் இன்றி தமிழ்மணத்தின் மீது தொடர்ந்து அவதூறு கற்பித்து வருகிறார்கள்./
தமிழ்மணத்தை ஒதுக்க அல்லது ஒதுக்க விரும்பும் சில மத, சாதி வெறியர்கள் என்று சொல்ல வந்தீர்களோ?
தமிழ்மணம் எவரையும் ஒதுக்கியதாகவோ ஒதுக்கவிரும்பியதாகவோ தெரியவில்லையே. இந்த மத, சாதி வெறியர்கள்தான் தமிழ்மணத்தை ஒதுக்கவேண்டும் என்று கத்துகிறார்கள்.
இதைத் திருத்திக் கொள்ளுங்கள். இல்லாதுபோனால் இதுக்கும் தமிழ்மணத்தோடு கத்துவார்கள். இவர்கள் வெறும் கையே வைத்துக்கொண்டே முழம் போட்டு பூ விற்கும் பேர்வழிகள் ஐயா
really good job. I appreciate.
தமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
எனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.
உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.
ராகாகி மற்றும் மரத்தடி போன்றவைகளின் பாசிசமில்லா செயல்பாடுகளை அறிய கார்த்திக்ராமாஸ், ரோசாவசந்த் ஆகியோரோடு தொடர்பு கொள்ளவும்.
ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.
சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.
நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.
எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.
ஜெய்ஹிந்த்!!!
நண்பர்களின் ஆதரவுக்கு நன்றி!!!
ஆதிசேஷனின் ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது :-)))))
தமிழ்மணத்துக்கு ஆதரவைப் பதிவு செய்துகொள்கிறேன்.
நானும் பட்டைய போட்டுட்டன்.
ஆனா, இது கொஞ்சம் வேற பட்ட - பட்டை
பட்டைப் போட விரும்பாதவங்களெல்லாம் பாலபாரதியைப் பார்த்து மொட்டைப் போட்டுக் கொள்ளலாம்.
நான் மொட்டையிலிருந்து தப்பித்தேன்.
:)
தமிழ்மணத்திற்கு என் ஆதரவைப் பதிவு செய்கிறேன்......
விட்ஜெட் போடுவதற்கு முயல்கின்றேன்
சிவஞானம்ஜி
நானும் பட்டைப் போட்டாச்சு..
என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...
இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...
இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...
இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.
உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...
இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி
லுக்கிலக்,
உங்களுக்கு ஒரு நல்ல சேதி
http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html
தமிழ்மணத்திலிருந்து நானும் "நீங்கி"விட்டேன்!
தான் தான் என்று நிற்கும் அவர்களின்
சப்தங்களை படிக்கிறபோது வேடிக்கையாக இருக்கிறது. யார் இவர்கள்? இந்த தேசியத்தை என்னவோ
பட்டாப்போட்டு வாங்கிவிட்டவர்கள்
மாதிரியல்லவா நடந்துக் கொள்கிறார்கள்.
100 கோடி மக்களையும், இந்தியா ஓர்
மதசார்பற்ற நாடு என்பதையும் மறந்த அவர்களது நடவடிக்கை நிஜமாகவே
வேடிக்கையாக இருக்கிறது.
தமிழ் மணத்திற்கான ஆதரவை இங்கே
உறுதி செய்கிறேன்.
- தாஜ்.
லக்கி அய்யா,
உங்க ஈமெயில் முகவரியை தரவும். உங்களைச் சந்திக்க ஆசை :)
என்னுடைய வலைப்பதிவில் (???) பின்னூட்டமாக இடவும்
நன்றி
நியே ஒரு 420 இதுல இந்த கருமம் வேற.
//சாதி, மதவெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைக்கும் பதிவர்களும் தயவுசெய்து தங்கள் டெம்ப்ளேட்டில் இந்த பேட்ஜை அணியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
look at my site, luckylook... :)
//சாதி, மதவெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைக்கும் பதிவர்களும் தயவுசெய்து தங்கள் டெம்ப்ளேட்டில் இந்த பேட்ஜை அணியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.// look at my site, luckylook :)
Post a Comment