வலைப்பதிவர் சந்திப்பு - சில துளிகள்!
- எந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் இல்லாத வகையில் ஏப். 22, 2007 அன்று நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருந்தது. ஸ்டார் பதிவர்களின் தாயக வருகையும் இதற்கு முக்கிய காரணம். வலைப்பதிவர் சந்திப்பு நடப்பதற்கு ஒரு வார காலம் முன்பாகவே சந்திப்புக்கு வரும்படி கூறி எஸ்.எம்.எஸ். மூலமாக சென்னை பதிவர்களுக்கு தொடர்ந்து ஒரு குழு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.
- சந்திப்பு 3.30 மணிக்கு என்று தெளிவாகக் கூறியிருந்தும் அ.மு.க.வினர் அதிகாலையிலேயே சென்னையை முற்றுகை இட ஆரம்பித்தனர். 12.30 மணியளவில் அ.மு.க.வினர் ஒரு குழுவாகச் சென்று அரசப்பர் ஹோட்டலில் வான்கோழி மற்றும் முயல் பிரியாணிகளை ஒரு கட்டு கட்டினர்.
- கிராமங்களில் கல்யாணத்துக்கு முந்தின நாளே வெளியூரில் இருந்து மச்சான் வருவார். நைட் புல் மப்பில் மங்காத்தா ஆடி கொண்டுவந்த பணத்தையெல்லாம் கோட்டைவிட்டு, அதிகாலையிலேயே முகூர்த்தத்துக்கு முன்பாக ஊருக்கு கிளம்பிவிடுவார். நண்பர் செந்தழலாரும் அதே கேட்டகிரி. வலைப்பதிவர் சந்திப்புக்காக பெங்களூரில் இருந்து வந்தவர், அமுக சந்திப்பில் மட்டும் கலந்துகொண்டு 2 மணிக்கே ஊருக்கு மூட்டையை கட்டினார்.
- வலைப்பதிவர் சந்திப்புக்கு போலிஸ் வரக்கூடும் என்று யாரோ ஒரு புண்ணியவான் திரியைக் கொளுத்தி போட்டு விட்டு போய்விட்டார் போலிருக்கிறது. சில பதிவர்கள் வீட்டை விட்டு அன்று தலையை வெளியே காட்டவில்லையாம்.
- 3.30 மணிக்கு மொட்டை அணிந்த பிரபல வலைப்பதிவாளர் ஒருவருடன் நடேசன் பார்க்குக்கு சென்றேன். கில்லி பிரகாஷ், பாஸ்டன் பாலா, விக்கி போன்றோர் அதற்கு முன்பாகவே அங்கு வந்திருந்தார்கள்.
- பாஸ்டன் பாலா பார்ப்பதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற உருவ அமைப்புடன் இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். அதுபோல இல்லாமல் கிரேஸி மோகன் நாடகங்களில் வரும் ஹீரோ மாது பாலாஜி போலிருந்தார்.
- சிறிது நேரத்தில் சிறில் அலெக்ஸும், உண்மைத் தமிழனும் வந்தனர். சிறில் அலெக்ஸின் பதிவில் போடப்பட்டிருக்கும் புகைப்படம் 30 ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றியது.
- இட்லி வடை சந்திப்புக்கு வருவதாக எனக்கு ஜிமெயிலில் வாக்கு கொடுத்திருந்தார். இட்லி வடை என்ற பெயரை சொல்லிக்கொண்டு யாரும் வரவில்லை. நண்பர் கிருபாஷங்கர் வந்ததையே இட்லிவடை வந்ததாக கருதி திருப்தியடைந்தேன்.
- வலைப்பூ வைத்திருப்பவர் மட்டுமல்லாமல் வலைப்பூ வாசகர்கள் சிலரும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள். கருத்துக்களங்களில் பதிவு எழுதிவரும் பாரி போன்ற தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
- நண்பர் மோகன்தாஸ் பெங்களூரில் இருந்து வந்திருந்தார். அவரது உடையலங்காரமும், சிகையலங்காரமும் அனைவரையும் கவர்ந்திருந்தது. தலைக்கு அவர் அனூப் ஹேர் ஆயில் பயன்படுத்துவது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.
- சிறப்பு பார்வையாளராக குமுதம் இதழில் கார்ட்டூன் வரையும் பாலா என்ற ஓவியர் வந்திருந்து அமைதியாக நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார். தேர்தல் நேரத்தில் அவர் வரைந்த “பாசக்கிளிகள்” கார்ட்டூன் எனது ஆல் டைம் பேவரைட்.
- சுமார் 50 வலைப்பதிவர்கள் சந்தித்த முதல் தமிழ் வலைப்பதிவாளர் சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நினைத்ததை விட பிரம்மாண்டமாக சந்திப்பினை நடத்தினார்கள் சென்னைப்பட்டினம் நண்பர்கள்.
- விழா தொடங்கியதுமே சாகரன் அலை என்ற நினைவஞ்சலி மலர் வெளியிடப்பட்டது. புன்னகை மன்னன் மா.சிவக்குமார் வெளியிட சாகரனின் உயிர்த்தோழரான பாலராஜன்கீதா பெற்றுக் கொண்டார். இதழை கையில் வாங்கும் போது பாலராஜன்கீதா முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
- தருமி கருப்புநிற தேநீர்ச்சட்டையில் பக்கா இளைஞராக காட்சியளித்தார். சிகைக்கு மட்டும் ஹேர் டை அடித்தால் மதுரை ரோமியோக்களுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார். ஏற்கனவே ஓகை நடராசன் டை அடித்து சென்னை இளைஞர்களின் வயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறார்.
- நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த உங்கள் நண்பன் “எங்கே டி.பி.ஆர். சார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். “திரும்பிப் பார்த்து” அவர் வரவில்லை என்றேன்.
- பெட்டகம் பற்றி சிறிலும், ஸ்னாப் ஜட்ஜ் பற்றி பாஸ்டன் பாலாவும், மற்ற எது எதையோ பற்றி யார் யாரோ மொக்கை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
- கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே பெண்பதிவர் தோழி பொன்ஸ் மட்டுமே. சமநீதி பேசும் பெண்பதிவர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு பெண்ணுரிமையை எதிர்காலத்திலாவது வலியுறுத்த வேண்டும். வெறும் எழுத்தும், பேச்சும் வேலைக்காகுமா? Action wins always.
- சந்திப்பு நடந்துகொண்டிருந்த போதே வளைகுடாவில் இருந்து அபி அப்பாவும், அவுஸ்திரேலிய அமுகவினரும் தொலைபேசி பல பதிவர்களுடன் பேசினார்கள்.
- தட்டை, முறுக்கு போன்ற பண்டங்கள் வினியோகிக்கப்பட்டன. என்ன இருந்தாலும் போண்டா மாதிரி வருமா என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே ஒரு பதிவர் முறுக்கினை நொறுக்கினார்.
- தமிழ்மண பின்னூட்ட உயரெல்லையை சிலர் ஆதரித்துப் பேசியபோது அது கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று ஓசை செல்லா பொங்கியெழுந்தார். நானும் அமுக சார்பில் என் எதிர்ப்பினை பதிவு செய்து கொண்டேன்.
- வலைப்பதிவர் சந்திப்பு நடந்த இடத்துக்கு அருகில் சுமார் 20 பேர் சேர்ந்து ஏதோ சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பொன்மாலைப் பொழுது பாடலை அருமையாகப் பாடினார். பிளேடு போடப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு அப்பாடல் தேவாமிர்தமாக இருந்தது.
- சந்திப்பு நடந்துக் கொண்டிருந்தபோதே ரோசாவசந்த், பாஸ்டன் பாலா, கில்லி போன்றோர் செம இலக்கிய தாகத்துடன் வெளிநடப்பு செய்தனர். அடுத்த முறை சந்திப்பினை நடத்துபவர்கள் “தண்ணி பாட்டிலும் Allowed” என்ற சலுகையை காட்டவேண்டும். தாகம் தணிந்து கூட்டம் முடியும் தருவாயில் ஸ்டெடியாக இக்குழுவினர் மீண்டும் வந்தனர்.
- குறும்புக்கார வலைப்பதிவர் ஒருவர் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் தன்னுடைய வலைப்பூ முகவரியாக doondu.blogspot.comஐ எழுதியிருந்தார்.
- வினையூக்கி வழக்கம்போல தான் எழுதும் கதை, கட்டுரைகளை ஒரு “அனானி” கன்னாபின்னாவென்று விமர்சிப்பதாக வருத்தப்பட்டார். அவர் அதை குறிப்பாக என்னிடம் ஏன் தான் சொன்னாரோ என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.
- ஈழப்பதிவர்கள் யாரும் கலந்துகொள்ளாதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.
- பதிவர் ஒருவருக்கு சந்திப்பு நடந்த தினம் திருமணநாளாம். மனைவியிடம் அலுவலகத்துக்கு போகிறேன் என்று பொய்சொல்லிவிட்டு சந்திப்பில் கலந்து கொண்டாராம். அவரது தொலைபேசி சிணுங்கிய போதெல்லாம் பேயறைந்தது போல சம்பந்தப்பட்ட பதிவரின் முகம் திகிலடைந்தது பரிதாபமாக இருந்தது.
- கூட்டம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். சுமார் 50 மீட்டர் தொலைவில் இருவர் மிகக்கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் நீலக்கலர் லுங்கி அணிந்து தியாகராஜ பாகவதர் ஹேர் ஸ்டைலில் இருந்தார். மற்றோருவர் ஷார்ட்ஸ் அணிந்து தொந்தியும், தொப்பையுமாக கேவலமாக காட்சியளித்தார். அவர்கள் அமுக, போட்டி அமுக அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று நாமக்கல்லில் இருந்து வந்திருந்த துப்பறியும் சாம்பு தெரிவித்தார்.
- இலைக்காரன் நான் கிடையாது. அது லக்கியும் அல்ல என்று திட்டவட்டமாக ஸ்டேட்மெண்டு விடுத்திருந்தார் முத்து (தமிழினி)
- “போலி” என்றச் சொல்லை எந்த வலைப்பதிவரும் உபயோகிக்காமல் நடந்த தமிழின் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. “சல்மா” என்று ஆரம்பித்தவர்களின் வாயில் உடனடியாக “தூயா”-வின் செய்முறைக் குறிப்புகளோடு செய்யப்பட்ட அல்வா திணிக்கப்பட்டது. சந்திப்பு முடியும் வரையிலும் அல்வா அடைக்கப்பட்டவர்களால் வாயைத் திறக்கமுடியவில்லை.
- குங்குமம் பத்திரிகையைச் சார்ந்த பெண்பத்திரிகையாளர் ஒருவர் கேமிராமேனுடன் வந்திருந்து நிகழ்ச்சியை கவர் செய்தார்.
- மக்கள் தொலைக்காட்சியின் குழு ஒன்று கேமிராவுடன் வந்திருந்து பரபரப்பை ஏற்படுத்தினர். பேட்டி, கவரேஜ் என்று அசத்தினர். மக்கள் தொலைக்காட்சியின் செய்தி மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவரும் நேரில் வந்திருந்து தமிழ் இணையத்துக்கு மக்கள் தொலைக்காட்சியில் தகுந்த இடம் அளிக்கப் போவதாக கைத்தட்டல்களுக்கு இடையே தெரிவித்தார்.
- இன்று காலை (23-4-07) மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் வலைப்பதிவர் சந்திப்பு விரிவாக காட்டப்பட்டது. சிறில் அலெக்ஸ் மற்றும் பாலபாரதி ஆகியோரின் Bite இடம்பெற்றது. க்ரூப் ஷாட்டில் மொட்டைத் தலை பதிவர் ஒருவரும், கருப்பு-சிவப்பு உடையலங்காரத்தில் இருந்த பதிவர் ஒருவரும் “பளிச்” எனத் தெரிந்தார்கள்.
- “பெண்ணே நீ” என்ற மாத(ர்) பத்திரிகை சந்திப்புக்கு வந்திருந்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. நம் வலைப்பூ நண்பர் ஒருவரின் ஆர்ட்டிக்கிளும் அந்த இதழில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சந்திப்பு முடிந்ததும் வழக்கம் போல ஒரு க்ரூப் “தாகத்துடன்” தி.நகர் பஸ் ஸ்டேண்டுக்கு கிளம்பியது. அச்சந்திப்பில் ஓகை நடராசன், ஓசை செல்லா, தருமி, வரவனையான், சிறில் அலெக்ஸ், உங்கள் நண்பன், நாமக்கல்லார், ரோசா வசந்த் போன்ற பக்திமான்கள் கலந்துகொண்டு பூசை செய்ததாகத் தெரிகிறது. புளியமரமும், லக்கிலுக்கும் பார்வையாளர்களாக சென்று கவுரவித்து செவன்-அப் பருகியதாகவும் இரவுக்கழுகார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஓசை செல்லாவுக்கும், சுகுணா திவாகருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு ஓகையார் அவஸ்தைப் பட்டாராம். அங்கே பார்ப்பனீயம், புரட்சி, சமுதாய மறுமலர்ச்சி போன்ற விஷயங்கள் அக்குவேறு, ஆணிவேறாக அலசப்பட்டதாம்.


-க்ளிக்கி வாசிக்கவும்!
44 comments:
டோண்டு/ஜெயராமன்/எ.அ.பாலா வந்திருந்தார்களா இல்லையா?
உங்க எழுத்துருல ஏதோ பிரச்சினை இருக்கு. சரி பண்ணுங்க
வலைப்பூ சுனாமி என்ன பேசினார் என்று சொல்லவே இல்லையே :)
-அமுக, பஹ்ரைன் கிளை
:))
//குறும்புக்கார வலைப்பதிவர் ஒருவர் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் தன்னுடைய வலைப்பூ முகவரியாக doondu.blogspot.comஐ எழுதியிருந்தார்.//
அது நீங்கதானே :D
இவ்ளோ குறும்பு வேற யாருக்கு வரும்??? :)
//மொட்டை அணிந்த பிரபல வலைப்பதிவாளர் ஒருவருடன் நடேசன் பார்க்குக்கு சென்றேன். ///
:)))))))))))))
புளியமரமும், லக்கிலுக்கும் பார்வையாளர்களாக சென்று கவுரவித்து செவன்-அப் பருகியதாகவும்
//
நம்பிட்டோம்....:)
//கிராமங்களில் கல்யாணத்துக்கு முந்தின நாளே வெளியூரில் இருந்து மச்சான் வருவார். நைட் புல் மப்பில் மங்காத்தா ஆடி கொண்டுவந்த பணத்தையெல்லாம் கோட்டைவிட்டு, அதிகாலையிலேயே முகூர்த்தத்துக்கு முன்பாக ஊருக்கு கிளம்பிவிடுவார்//
எங்கள் தங்கத்தலைவன் மேல் இப்படி இட்டுக்கட்டி குற்றம் சுமத்தும் லக்கியாரை வன்மையாக கண்டிக்கிறோம்
இவண்,
செந்தழலார் கொலைவெறிக் கழகம்
பஹ்ரைன்
ஆகா...அருமை...சூப்பர்...பிரமாதம்...
லக்கிலுக் கவரேஜ்ல அவுட்லுக் தோத்தது போங்க...
அமுகவினருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்ததைக் கண்டு உளமகிழ்ந்த அவுசுதிரலாசிய அமுக தலைக்கிளை, லக்கிலுக் அவர்களுக்கு "அமுக கொண்டான்" என்ற சிறப்புப்பட்டத்தை வரும் டிசம்பர் மன்த்தில் அதே நடேசன் பூங்காவில் வழங்கி கவுரவிக்கும் என்று தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அமுக
அவுசுதிரலாசிய தலைக்கிளை
செராங்கூன் ரோடு
லிட்டில் இண்டியா சமீபம்
சிங்கை
ரொம்ப நல்ல கவனிச்சு தட்டியிருக்கீங்க :-)). உங்க நக்கல் பதிவை படித்த பிறகு நல்லவேளை நாமப் போகலன்னு என்னைப் போல் நிறையப் பேர் நினைக்கக் கூடும்.;-)
//“போலி” என்றச் சொல்லை எந்த வலைப்பதிவரும் உபயோகிக்காமல் நடந்த தமிழின் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.//
ஷேம் ஷேம்.
தருமி அய்யாவும் ஓகையவர்களும் ராசி ஆயிட்டாங்களா?:)
உளவுத்துறையின் எச்சரிக்கையால் இரு பதிவர்கள் உயிர் தப்பினர்.
இப்படிக்கு
போலிதாசன்
தலையணைக்கு உயரம் போதல்லன்னு அடியிலே பாட்டல் வெச்சு படுக்கிற நீயி செவன் அப் மட்டும் குடிச்சியாக்கும்?
அத நாங்க நம்பனுமாக்கும்?
//அவர் அனூப் ஹேர் ஆயில் பயன்படுத்துவது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.//
எங்கே கிடைக்கும், விலை விவரம் என்ன, அத்தெண்டிசிட்டி எவ்வளவு போன்ற போதிய விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ;)
இவண்
எதிர்காலம் பற்றி கவலைப்படும்
மோகன்தாஸ்
நச்சுன்னு இருக்கு :) இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/04/23/wewillmeet/
"7அப்ப" ராவாவே அடிச்சுட்டீங்களா
:))
சென்ஷி
//வினையூக்கி வழக்கம்போல தான் எழுதும் கதை, கட்டுரைகளை ஒரு “அனானி” கன்னாபின்னாவென்று விமர்சிப்பதாக வருத்தப்பட்டார். அவர் அதை குறிப்பாக என்னிடம் ஏன் தான் சொன்னாரோ என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.//
ஹிஹிஹிஹி.... :)
மொட்டை அணிந்த அந்த வலைப்பதிவாளர் பார்க்க காந்தி மாதிரியே இருந்தாராம். என்னடா இது காந்தி எங்க வலைபதிவாளர் சந்திப்பிற்கு வந்துவிட்டாரே என்று அவருடன் கைகுலுக்கிய ஒருவர் நினைத்துவிட்டாராமே? உண்மையா?
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..
ஒண்ணுமில்லே...பின்னாலே எதுக்காச்சும் உபயோகமா இருக்கும் முன்னாலேயே சும்மா போட்டு வெக்கிறேன்.
//மோகன்தாஸ் said...
//அவர் அனூப் ஹேர் ஆயில் பயன்படுத்துவது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.//
எங்கே கிடைக்கும், விலை விவரம் என்ன, அத்தெண்டிசிட்டி எவ்வளவு போன்ற போதிய விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ;)
இவண்
எதிர்காலம் பற்றி கவலைப்படும்
மோகன்தாஸ்//
மெய்யாலுமா... :)
பாகச வினரின் பங்கேற்ப்பை இருட்டடிப்பு செய்ததற்க்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகச தென்சென்னை கிளை
//புளியமரமும், லக்கிலுக்கும் பார்வையாளர்களாக சென்று கவுரவித்து செவன்-அப் பருகியதாகவும் //
லக்கி தம்பி, மெய்யாலுமா?
லக்கிண்ணா இனிமயாச்சும் என்னை பார்த்து யாராச்சும் பயப்படுவாங்க..நன்றி
(ம்ம்ம் புரியுது...புரியுது)
சுவையான தொகுப்பு, படிப்பதற்கே சுவையாரமாக இருந்தது.
i saw the blogger meet clip on yesterday makkal tv news !!!
லக்கி பதிவு சூப்பர் அதை விட பின்னூட்டங்கள் தான் கலக்கல்.
//"7அப்ப" ராவாவே அடிச்சுட்டீங்களா//
:)) இல்ல மிக்ஸிங்குக்கு சரக்கு சேத்துகிட்டாரு.
தலைமை தாங்க வேண்டுமென்ற என் ஆசை நாற்பது வயதுக்கு மேல் தான் நிறைவேறியது. அதன் பீறகு எப்போதுமே தலை மை தான்.
// ஓசை செல்லாவுக்கும், சுகுணா திவாகருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு ஓகையார் அவஸ்தைப் பட்டாராம். அங்கே பார்ப்பனீயம், புரட்சி, சமுதாய மறுமலர்ச்சி போன்ற விஷயங்கள் அக்குவேறு, ஆணிவேறாக அலசப்பட்டதாம்.//
போதிய அவகாசம் இல்லாததால் அவர்கள் இருவரும் என்னிடமிருந்து தப்பித்துவிட்டார்கள் என்பதே என் தரப்பு உண்மை.
விலாவரி க்கு நன்றி.
ஆம்.நீங்கள் சொல்வது போல் பாஸ்டன் பாலா மாது பாலாஜி போல அழகா இருந்தார்.
மொத்தத்தில் நிறைவான சந்திப்பு.
மொத்தத்தில் நிறைவான சந்திப்பு.
மங்காத்தா ரவி, மாது பாலாஜி, நாமக்கல்(ஷா)சாம்பு...பட்டப் பெயர்கள் எல்லாம் சூப்பராக இருக்கிறது லக்கியாரே!
இந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது சிறப்பான விஷயம். ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள். விவரமாக சுவையாக தொகுத்ததற்கு லக்கிலுக்குக்கு நன்றி. (ஓசை செல்லா கோவையில் ஏற்பாடு செய்யும் நிகழ்விலாவது கலந்துகொள்ள ஆசை. பார்க்கலாம்..)
குறும்பான காமெடிப்பதிவு...
அருமையான பாய்ண்ட்...சூப்பர்...
வினையூக்கிக்கும் அ.மு.கவுக்கும் ஏதாவது தகறாறா ? மூனு கமெண்டை தொடர்ச்சியாக அடித்துள்ளாரே !!!
தண்ணியனானேன்.
நான் மனதுக்குள் மிக அதிகமான மரியாதை வைத்திருக்கும் திரு. காசி ஆறுமுகம் அவர்கள் என் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன்னர் நாக. இளங்கோவன் ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டபோதும் இதே போன்ற மகிழ்ச்சியை அடைந்தேன்.
சூப்பர் தொகுப்பு.
பி.கு: நான் பின்னூட்டம் இட்டதுக்கெல்லாம் தண்ணியனாகாதீங்க.
நோ பார்மாலட்டீஸ் :)
வீடியோவுக்கு இங்கே போங்க.
நான் பின்னூட்டம் போட்டால் வெளியிடுரதில்லைண்ணு ஏதும் கொள்கை வச்சிருக்கீங்களா என்ன??
:(
//நான் பின்னூட்டம் போட்டால் வெளியிடுரதில்லைண்ணு ஏதும் கொள்கை வச்சிருக்கீங்களா என்ன??//
வந்தா தானே வெளியிடுறதுக்கு? :-((((
லக்கி,
ஒரு மாத துணுக்கு மூட்டைய ஒரே மூச்சுல படிச்சாப்புல இருந்தது! நம்ம மக்கா அட்டூழியங்களை படிக்க படிக்க பொகையா வேற இருக்கு! :)
நன்றி!
நாந்தான் 40வது போல! கயவன்னு திட்டாதீக! :)
//பக்திமான்கள் கலந்துகொண்டு பூசை செய்ததாகத் தெரிகிறது. புளியமரமும், லக்கிலுக்கும் பார்வையாளர்களாக சென்று கவுரவித்து செவன்-அப் பருகியதாகவும் இரவுக்கழுகார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
//
:)))
சுவையான தொகுப்பு லக்கி :)
வலைப்பதிவர் கூட்டம் பற்றியதொரு அருமையான கவரேஜ், நெடுகிலும் லக்கி லுக் டச் :)
//ஈழப்பதிவர்கள் யாரும் கலந்துகொள்ளாதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.//
மலேசியா சிங்கப்பூர் ஆட்களை எல்லாம் மறந்து போய் விட்டீர்கள்!
:-(((
நண்பர் கிருபாஷங்கர் வந்ததையே இட்லிவடை வந்ததாக கருதி திருப்தியடைந்தேன்.
ஒரேஏஏஏஏ ஒரு தடவை நான் எழுதின கதை இட்லிவடைப் பதிவுல வந்துருக்கு. அப்பறம் அந்த 'கில்லி' பின்னூட்டம். அவ்வளவுதான். இப்படி எல்லாரும் நான்தான் இட்லிவடைன்னு அடிச்சு சொல்லும்போது எனக்கே ஒரு வேளை நான்தான் இட்லிவடையோன்னு நம்பிக்கையே வந்துடும் போலருக்கு.
Post a Comment