
“ஹலோ, மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா?”
“எப்போடா?”
“நேத்து நைட்டு தான் பிக்கப் பண்ணேன். என்னோட ரூமுலே தானிருக்கு!”
“ரூமுலே வெச்சுக்கிட்டிருக்கியா? அடப்பாவி ஒரு நைட்டு முழுசா முடிஞ்சிடிச்சே!”
“ஆமாம் மச்சான், நேத்து செம ஜாலியா இருந்தது.. கிருஷ்ணன் கூட இன்னைக்கு காலைலேர்ந்து லீவ் போட்டுட்டு என் ரூமுலே தானிருக்கான். நான் ஆபிசுக்கு வந்துட்டேன். திரும்ப சாயங்காலம் போயி...”
“டேய்.. டேய்.. ப்ளீஸ் என்னையும் விளையாட்டுலே சேத்துக்குங்கடா!”
“உனக்கு தான் இந்த மேட்டரே புடிக்காதே மச்சான்.. என்னா கலரு, என்னா கொரலு, கண்ணு ரெண்டும் மான் மாதிரி இருக்குடா!”
“அய்யோ.. சொக்கா.. சொக்கா.. உனக்கெல்லாம் எப்படிடா மாட்டுது?”
“த்ரீ தவுசண்ட் கொடுத்தா யாருக்கு வேணும்னாலும் மாட்டுண்டா”
“எத்தனை நாளைக்குடா வெச்சுக்கிட்டிருப்பே?”
“எத்தனை நாளைக்கா? பர்மணெண்டா வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேண்டா!”
“பர்மணெண்டாவா? ஊர்லே இருந்து எப்பவாவது அப்பா, அம்மா திடீர்னு வந்துட்டாங்கன்னா பிரச்சினை ஆயிடாது?”
“என்னா பிரச்சினை ஆவும்? ஊர்லே இருக்குறப்பவே ஒண்ணு வெச்சிருந்தேண்டா. அம்மா அப்பாவுக்கும் நல்லா தெரியும்!”
“நல்ல குடும்பம் போ! நான் இப்பவே உன் ரூமுக்கு போவட்டாடா.. ஆசையா இருக்குடா!”
“வேணாம்டா. கிருஷ்ணனை டிஸ்டர்ப் பண்ணாதே. அவனே ஆஃபிஸ் டென்ஷனை எல்லாம் மறந்து கொஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கட்டும்!”
“ப்ளீஸ்டா.. உன் ரூமுல்லே வேணாம்னா நான் வேணும்னா சாயங்காலம் எங்கேயாவது வெளியே கூட்டிக்கிட்டு போறேண்டா!”
“உன் இஷ்டம்! ஆனா பார்த்து கூட்டிக்கிட்டு போ. ரொம்ப புதுசு. பயந்துட போவுது!”
“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்!”
“அப்போ சரி. மட்டன், கிட்டன் வாங்கி கொடுத்துடாதே. எலும்பு கடிக்கக் கூட அதுக்கு தெரியாது. பிஸ்கட் மட்டும் வாங்கிக் கொடு!”
“என்னாது பிஸ்கட்டா?”
“ஆமாண்டா. அய்யர் வீட்டுலே வளர்ந்தது.. பாலும், பிஸ்கட்டும் மட்டும் தான் சாப்பிடுது! பொறந்து ஒண்ணரை மாசம் கூட இன்னும் ஆவலே!”
“மச்சி.. நீ எதைப் பத்திப் பேசுறே?”
“நாயைப் பத்தி பேசுறேண்டா. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தேன் இல்லே. ஒரு பொமரேனியன் வாங்கணும்னு. ஆமா. நீ எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?”
“ம்ம்ம்... நானும் நாயைப் பத்தின்னு நெனைச்சி தாண்டா பேசிக்கிட்டிருந்தேன்” டொக்...
'குட்டி' கதை!
Posted by
லக்கிலுக்
at
12
comments
Links to this post
நார்நியா ரிட்டர்ன்ஸ் - திரைவிமர்சனம்!

கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது.
பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார்நியா மூன்றாண்டுகளுக்கு முன்பாக Chronicles of Narnia என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வசூலில் சக்கைபோடு போட்டது. இப்போது வெளிவந்திருப்பது இரண்டாம் பாகம் Narnia - Prince Caspian.
தமிழில் மொழிமாற்றி சென்னையில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலேயே இத்திரைப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆங்கிலப் படத்தை காண்கிறோம் என்ற உணர்வு வராத அளவுக்கு மிகத்தரமான மொழிமாற்றம். முதல் பாகம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் இருந்தது. மாறாக இரண்டாம் பாகம் அட்வெஞ்சர் படமாக எல்லாத்தரப்பையும் ஈர்க்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கொடுமைக்கார சித்தப்பாவான மிஸ்ரா எதிர்காலத்தில் நாட்டுக்கு அரசனாக வேண்டிய இளவரசன் கேஸ்பியனை கொல்ல முயல்கிறார். ஒரு புரொபசர் மூலமாக தப்பிக்கும் கேஸ்பியன் நார்நியன்களின் துணையோடு தன் சித்தப்பாவை வெல்கிறார் என்ற கொய்யாமர இலையில் எழுதிவிடக்கூடிய சிறிய கதை. இதற்கு பரபரப்பான திரைக்கதை, வசனம் மற்றும் நிஜமா கனவா என்று அறிய இயலா கிராபிக்ஸ் உத்தியின் துணைகொண்டு சுவாரஸ்யமான இரண்டேகால் மணிநேர திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சங்கு ஊதியதுமே நிகழ்காலத்தில் லண்டன் ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் லூசி குழுவினர் நார்நியாவுக்குள் புகுவது பக்காவான காதுல பூ ரக காட்சி என்றாலும் அக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம்.
பிரின்ஸ் கேஸ்பியன் அழகாக இருக்கிறார், அவர் அழகுக்கு அவர் ஒரு சப்பை ஃபிகரை ஜூட் விடுவது கடுப்பு. நார்நியாவின் அரசனான சிங்கம் அஸ்லான் தோன்றும் ஓபனிங் காட்சிகளில் தியேட்டரில் விஜய் படம் லெவலுக்கு விசில் பறக்கிறது. விசில் அடிக்கும் இளசுகள் பலரும் முதல் பாகம் வந்தபோது குழந்தைப் பருவத்தில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. இன்னமும் அவர்களால் அஸ்லானையும், அவரது சாகசங்களையும் மறக்கமுடியவில்லை. எலிப்படை செய்யும் அட்டகாசங்களும் எலித்தளபதியின் வீரவசனங்களும் கலக்கல். பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமேக்ஸ் போர்க்காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.
வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி வியக்க வைக்கிறது. இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்பாக நார்நியாவின் முதல் பாகத்தை பத்துநாட்களுக்கு முன்புதான் சன் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பியிருக்கிறார்கள். உலகளவில் பிரபலமான எல்லாத் தொலைக்காட்சிகளிலும் முதல் பாகம் இப்போது அடிக்கடி ஒளிபரப்பபட்டு வருகிறது. இரண்டுநாட்களுக்கு முன்பாக கூட செட்மேக்ஸில் நார்நியா ஒளிப்பரப்பானது. முதல்பாகத்தை தொலைக்காட்சியில் பார்த்த எல்லா குழந்தைகளுமே இரண்டாம் பாகத்தை தியேட்டரில் காண பெற்றோரிடம் அடம் பிடிக்கப் போகிறார்கள்.
நீங்கள் தமிழராக இருந்தால் இப்படத்தை தமிழில் திரையிட்ட திரையரங்குகளில் காணுங்கள். ஒரிஜினல் தமிழ்ப்படங்களுக்கு கூட இவ்வளவு அழகுத்தமிழில் வசனங்கள் எழுதுவதில்லை. இதுபோன்ற படங்களுக்கான மொழிமாற்றத்துக்கு உழைக்கும் கலைஞர்களின் பெயர்களை டைட்டிலில் போடுவதில்லை. இதுபோல ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடும்போது டப்பிங் கலைஞர்களின் பெயரையும், வசனகர்த்தா பெயரையும் தனியாக டைட்டிலில் போடுவது தான் அக்கலைஞர்களுக்கு செய்யக்கூடிய நியாயமும் கூட.
குழந்தைகளோடு பெற்றோர் கட்டாயம் காணவேண்டிய படமிது! குருவி பார்த்து வெறுப்பானவர்கள் கூல் ஆகவும் இப்படத்தைப் பார்க்கலாம்!!
சின்ன விளம்பரம் : பரபரப்பான வலையுலகச் சூழலில் நாளை (18-05-2008) சென்னை கடற்கரை காந்திசிலைக்கு பின்புறம் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அலைகடலென திரண்டு அனைவரும் வாரீர்!!! மேலும் விபரங்களுக்கு சென்னை வலைப்பதிவர்களின் டோல்ஃப்ரீ எண் : 9940203132.
Posted by
லக்கிலுக்
at
12
comments
Links to this post
குருவி - ஞாயிறு (18-5-08) பதிவர் சந்திப்பு - காக்டெயில்!
சென்ற மாதம் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. திரைப்படங்களாக பார்த்து தள்ளினேன். பார்த்த திரைப்படங்களுக்கெல்லாம் விமர்சனங்களும் கிறுக்கி தொலைத்தேன். அப்போது ஒரு நண்பர் கூட கேட்டார், “ஏன்யா சொந்தமா ஏதாவது தியேட்டர் வெச்சிருக்கியா? இல்லை உன் மாமனாரு ஒரு தியேட்டர் ஓனரா?” என்று. அவர் கண்பட்டதால் இந்த மாதம் நேரமே கிடைக்கவில்லை. இன்னமும் குருவி கூட பார்க்கவில்லை :-(
தோழர் வரவனை கூட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொன்னார், “லக்கி ஒரு அஜித் ரசிகன்”. என்ன கொடுமை சார் இது? நான் கால்டவுசர் போட்டிருந்த காலத்தில், வான்மதி வந்த காலத்தில் அஜித் ரசிகனாக இருந்தது என்னமோ வாஸ்தவம்தான். ரெட், ஜனாவெல்லாம் பார்த்துட்டு யாராவது அஜித் ரசிகராக இன்னமும் இருக்கமுடியுமா? அந்த அளவுக்கு பகுத்தறிவு இல்லாதவனா நான்? என்றைக்கு போக்கிரி பார்த்தேனோ, அன்றிலிருந்து தீவிர விஜய் ரசிகன் ஆகிவிட்டேன் என்பது தான் உண்மை. இனிமேல் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம்.
அதுவும் இளைய தளபதி ஒரு முறை தளபதி மேயராக இருந்தபோது சந்தித்து வெள்ளநிவாரணத்துக்கோ, எதுக்கோ நிதி கொடுத்தபோது இளையதளபதி மீது மதிப்பு இயல்பாகவே எகிறியது. தளபதியின் மகன் படத்தில் நடிக்கிறார் என்றதும் மடிப்பாக்கத்தில் 'மாண்புமிகு மாணவன் விஜய் ரசிகர் மன்றம்' ஆரம்பித்துவிடலாமா என்று கூட யோசித்தேன். குருவியின் ரெக்கைகளை பிய்த்து எறிந்து, பத்திரிகைகளும் வலைப்பூக்களும் விமர்சனம் எழுதுவதை பார்க்கும்போது படம் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்து நான் ஏதாவது ஏடாகூடமாக விமர்சனம் எழுதப்போக கட்சித்தலைமை என் மீது நடவடிக்கை ஏதாவது எடுத்துவிடுமோ என்று அச்சப்படுகிறேன். சமீபத்தில் தான் ஒரு கிளையின் நிர்வாகக்குழு பதவி கொடுத்திருக்கிறார்கள். பகுதிநேர அரசியல்வாதிகளுக்கு இதுமாதிரி உப்புமா பதவிகள் தான் கொடுப்பார்களாம். வட்டச் செயலாளர், கொட்டச் செயலாளர் பதவிகள் எல்லாம் முழுநேர அரசியல்வாதிகளுக்கு தான் சாத்தியம். எனக்கு உலகில் பிடிக்காத ஒரே வார்த்தை உப்புமா!!
ஓக்கே, மேட்டருக்கு வருகிறேன். அஜித்தின் கொலைவெறி ரசிகரான நண்பர் விஸ்வா ஏதோ ஒரு தனியார் பண்பலை வானொலியில் பணிபுரிகிறார். விஜய்க்கு ஆப்பு என்றபோதெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி குரூரமாக மகிழ்வது அவரது வாடிக்கை. என்னைப் போலவே அவரும் சிறந்த மொக்கைப்பட ரசிகராக இருந்தாலும் கூட அழகிய தமிழ்மகன், குருவி படங்களுக்கு அவர் பாவமன்னிப்பு வழங்குவதாக இல்லை. குருவி கும்மியடித்தபிறகு அவர் சுனாமி வேகத்தில் அனுப்பிய சில குறுஞ்செய்திகள் :
2002-வசீகரா, 2003-புதியகீதை, 2004-உதயா, 2005-சச்சின், 2006-ஆதி, 2007-அழகிய தமிழ்மகன் - இத்தனை வருஷத்துலே எவ்வளவோ தாங்கிட்டோம், இதையும் தாங்கிட மாட்டோமா? 2008-குருவி!!
பத்து பறவைகள் ஒரு மின்கம்பியில் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அதைப் பார்த்ததுமே அஜித் அந்தப் பறவைகளை துரத்தும் விதமாக பில்லா பாணியில் துப்பாக்கி எடுத்து பறவைகளை சுட முயற்சித்தார். வழக்கம்போல அஜித்தின் குறி கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் எங்கோ போய் யாரோ ஒரு ஆயாவை சுட்டுத் தொலைத்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே ஒன்பது பறவைகள் ஓடிவிட்டது. ஒரே ஒரு பறவை மட்டும் ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்றது. அது விஜய்யின் குருவி, ஓடவே ஓடாது!!
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!!
விஜய்யை புடிச்சி காசை கொடுத்து நடிக்கச் சொல்லுகிற உலகம்!!
அது எப்படி நடிக்கும் அய்யா? படம் எப்படி ஓடுமய்யா? ஓ.......
(இதே குறுஞ்செய்தி பாபா வெளியான நேரத்தில் ரஜினி பெயரில் வந்ததாக நினைவு)
இந்தியாவை உலுக்கிய பேரழிவுகள் : 2003-பூகம்பம், 2004-சுனாமி, 2005-ஆதி, 2006-சிக்கன்குனியா, 2007-அழகிய தமிழ்மகன், 2008-குருவி
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ஈழத்தமிழர்கள் பலருக்கும் ரஜினியை பிடிப்பதில்லை, ஆனால் விஜய்யை மட்டும் ரொம்ப பிடிக்கிறது. மாறாக தமிழ்நாட்டில் ரஜினியை பிடித்தவர்களுக்கு மட்டும் தான் விஜய்யை பிடிக்கிறது. என்ன லாஜிக்னே புரியலையே?
* - * - * - * - * - * - * - *
முன்பெல்லாம் பதிவர் சந்திப்புகள் என்றாலே எப்போதும் முன்பு பலமுறை பார்த்த மூஞ்சிகளே திரும்ப திரும்ப வரும். திரும்பவும் அதே மூஞ்சியா என்று சலித்துக் கொள்வேன். என் மூஞ்சியை பார்த்து மற்றவர்களும் “அடச்சே! மறுபடியும் இவனா?” என்று சலித்துக் கொள்வார்கள். ஏதோ மொக்கையாக ஒருமணி நேரம் பேசிவிட்டு போண்டாவும், தேங்காய் சட்னியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பி, ராத்திரியோடு ராத்திரியாக பதிவு போட்டு அதற்கு ஒரு இருபது முப்பது அனானி கமெண்டுகளையும் அவரவரே போட்டுக் கொள்வார்கள். எழுத்தாளர் சுஜாதா கலந்துகொண்ட சந்திப்பு ஒன்றிலும் கூட போண்டா பிரதானமாக இடம்பெற்றது என்று வரலாற்றில் குறிப்புகள் உண்டு.
இப்போது பதிவர் சந்திப்புகளுக்கு நிறைய புதுப்பதிவர்களும், வாசகர்களும் வருகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. வாசகிகள் வருவதில்லை என்பதுதான் என்னுடைய ஒரே குறை. பரவாயில்லை அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அண்மைய சந்திப்புகள் கடற்கரையில் நடைபெறுகிறது. சைட் அடித்துக்கொண்டே சந்திப்பில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது.
வரும் ஞாயிறு (18-05-2008) அன்றும் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திராவிட ஆன்மீக (!) அன்பர் கோவி.கண்ணன் சென்னை வருகிறார். ஏற்கனவே ஒருமுறை கோவியாரை சந்தித்திருக்கிறேன். நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசக்கூடிய நல்ல நண்பர். சென்ற கடற்கரை சந்திப்பின் போது 'மாதம் ஒரு சந்திப்பு' என்று கோரிக்கை வைத்த நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அதே நேரத்தில் அனானிகளும், வாசகர்களும் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் எல்லாம் வல்ல தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன். யாராவது வாசகிகள் வந்தால் பெரும் மகிழ்ச்சி!!
சந்திப்பில் இளைய தளபதியின் குருவி, கலைஞரின் உடல்நலக்குறைவு, அழகிரி விடுதலை, உத்தமபுரம் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பிளேடு போட்டுத் தள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு ஜோடி காதுகளாவது உங்கள் அறுவையை கேட்கத் தயாராக இருக்கும் என்ற குறைந்தபட்ச உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும்.
மாலை ஐந்தரை மணிக்கு சந்திப்பு என்பதால் கடற்கரை ஜெகஜோதியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சந்திப்பு வருபவர்கள் கட்டாயம் ஒரு பாட்டிலோடு வரவேண்டும். சென்னை சந்திப்புகளின் வழக்கமான நிபந்தனை இச்சந்திப்புக்கும் பொருந்தும். போண்டாவுக்கு அனுமதியுண்டு, போளிக்கு அனுமதியில்லை! பாலபாரதி குறித்த பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் வலையேற்றியபோது பாலாண்ணாவை சந்திக்காத நிறைய தோழர்கள் என்னை தொடர்புகொண்டு அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டார்கள். வரும் ஞாயிறு 5.31 மணிக்கு அவரை சென்னை கடற்கரையில் காந்தி சிலைக்கு பின்னால் கட்டாயம் சந்திக்கலாம்.
* - * - * - * - * - * - * - *
இன்று காலை சைதாப்பேட்டையில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். மணப்பெண் என் நெருங்கிய உறவினர், மணமகன் கொஞ்சம் தூரத்து உறவினர். மணப்பெண்ணின் இன்னொரு நெருங்கிய உறவினரிடம் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
“என்னாய்யா மரியாதை கொடுக்குறாங்க உங்க சொந்தக்காரங்க! வந்தவங்களை வரவேற்க கூட தெரியலை. இவ்ளோ ஆடம்பரமா கல்யாணத்தை நடத்தி என்னாத்தை புடுங்கப் போறாங்க!” - அவர் இன்னும் மிக நீளமாக ஏராளமான சொல்லாடல்களை பயன்படுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வரும் மயில்சாமியின் 'என்னா மரியாதை!' ஜோக் தான் நினைவுக்கு வந்தது.
திருமணத்துக்கு வருபவர்களை “வாப்பா.. உட்காருப்பா.. வீட்லே வரலையா? அம்மா சவுக்கியமா? அப்பா நல்லாருக்காரா?” போன்ற வார்த்தைகளில் ஒரு பத்துநொடியில் வரவேற்று விடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பணிப்பளுவுக்கும், கால அவகாசத்துக்கும் இதைதான் செய்யமுடியும். இதையும் தாண்டி என்ன பெரிய மசுரு மரியாதையை சில கோயிந்துகள் எதிர்பார்க்கின்றன என்று தெரியவில்லை. என் சகோதரி திருமணத்தின் போது கூட இதேபோல ஒரு மரியாதைராமன் என்னிடம் சண்டை போட்டது நினைவுக்கு வருகிறது.
Posted by
லக்கிலுக்
at
19
comments
Links to this post
சில விளம்பரங்கள்!
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.
வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.
இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.
ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.
ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.
ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.
மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.
நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.
கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.
அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.
சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!
Posted by
லக்கிலுக்
at
29
comments
Links to this post
தொழில் ரகசியம்!

20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.
பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.
பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.
“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”
“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”
“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”
“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”
“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”
இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.
“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”
நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.
அஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.
“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.
“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”
“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலேயே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.
கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”
“விபச்சாரம்!”
“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”
“சரி!”
“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”
“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”
“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”
“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”
“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்ப